Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தக் காலத்தில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா..?

விலை உயர்ந்த தன் காரில் பறவை ஒன்று கூடு கட்டியதற்காக அதனைப் பயன்படுத்தாமல் இருக்கிறார் துபாய் இளவரசர். இந்த மனிதாபிமான செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டை பெற்று வருகிறது.

துபாய் இளவரசர் ஷேக் ஹம்தானின், விலை உயர்ந்த மெர்சிடிஸ் எஸ்யூவி காரில், முட்டையிடுவதற்காக பறவை ஒன்று கூடு கட்டியிருக்கிறது. முட்டைகளுடன் அந்த கூட்டில் உள்ள பறவையை பாதுகாக்க, அந்த காரை உபயோகிக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார் துபாய் இளவரசர்.

மேலும், அதன் அருகில் யாரும் செல்லக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் பறவைக்கு இடையூறாக யாரும் அதன் அருகில் செல்லக்கூடாது என்பதற்காக, காரை சுற்றி சிவப்பு டேப் ஒன்றும் பாதுகாப்பு வளையமாக போடப்பட்டுள்ளது. தனது காரையும், அதில் உள்ள பறவையையும், இளவரசர் வீடியோவாக எடுத்து வெளியிட அது இப்போது வைரலாகி வருகிறது. பறவைக்காக அவர் எடுத்துள்ள இந்த மனிதாபிமான நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version