மாநிலத்தில் தொடர் மழையால் பல பகுதிகள் நீரில் முழ்கியது!! நிவாரண பணிகள் தீவரம்!!
வட மாநிலங்களில் பருவ மழை தொடங்கிய நாட்கள் முதல் பலத்த கனமழை பெய்து வருகிறது. மேலும் கனமழை காரணமாக சில மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளப்பெருக்கு மற்றும் பல கிராமங்கள் நீரில் முழ்கியது. மேலும் வட மாநிலங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் மக்களை பாதுக்காப்பான பகுதியில் தங்க வைத்து வருகிறார்கள்.
தெலுங்கனா மாநிலத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் தொடங்கிய பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதனையடுத்து தொடர் மழையால் பல பகுதிகள் நீரில் முழ்கி உள்ளது. மேலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து கோயில் நகரத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் இன்று காலை நிலவரப்படி நீர் மட்டம் 54.60 அடியாக அதிகரித்து உள்ளது. இந்த கனமழை காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளது. மேலும் ஒரு வாரத்தில் 16 பேர் பலியாகி உள்ளார்கள். அதனை தொடர்ந்து பாதிக்கபட்ட பகுதிகளில் இருந்து மக்களை பாதுக்காப்பாக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் கனமலை, வெள்ளப்பெருக்கு காரணமாக பல பகுதிகளில் விவசாய நிலங்கள் நீரில் முழ்கி உள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் 19, 000 ஆயிரம் பேர் பாதுப்பான இடங்களில் உள்ளார்கள் என்று தெலுங்கானா டிஜிபி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மலையின் தீவரம் குறைந்துள்ளது. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.