Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரதமர் மோடி வருகையால் வரும் 8 ஆம் தேதி சென்னை முழுவதும் இதற்கெல்லாம் தடை 

Just before: Annamalai resigns.. Urgent meeting with Modi!! Important information released!!

Just before: Annamalai resigns.. Urgent meeting with Modi!! Important information released!!

பிரதமர் மோடி வருகையால் வரும் 8 ஆம் தேதி சென்னை முழுவதும் இதற்கெல்லாம் தடை 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி வருகின்ற 8 ஆம்தேதி சென்னை முழுவதும் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வானூர்திகள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கவும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை தர உள்ளார். வருகின்ற 8 ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலமாக சென்னை வந்தடைகிறார்.

முதலாவதாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து சேலம் வரை புறப்படும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

பின்னர் மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து அந்த இடத்தில் பத்து நிமிடம் உரையாற்றிய பிறகு பல்லாவரம் பகுதியில் பொதுமக்களிடம் 20 நிமிடம் உரையாற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு மீண்டும் தனி விமானம் மூலமாக கேரளாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செல்கிறார்.

பிரதமர் சென்னை வருகை ஒட்டி சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது
விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பும், முக்கிய வழித்தடங்களில் ஐந்து அடுக்கு பாதுகாப்பும் போடப்படுகிறது.

குறிப்பாக வருகின்ற எட்டாம் தேதி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சென்னை நகருக்கு உட்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வானூர்திகள் பறக்க சென்னை மாநகர போலீசார் தடை விதித்துள்ளனர்

Exit mobile version