Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கேன்சர் நோயின் தாக்கம் காரணமாக விரக்தியில் தண்டவாளத்தில் தலை வைத்து முதியவர் தற்கொலை!

#image_title

வண்டலூர் அருகே கேன்சர் நோயின் தாக்கம் காரணமாக விரக்தியில் தண்டவாளத்தில் தலை வைத்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வண்டலூர் ரயில் நிலையம் அருகே தலை துண்டான நிலையில் முதியவரின் சடலம் இருப்பதாக தாம்பரம் இருப்பாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் உடல் பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு நடத்தபட்ட முதற்கட்ட விசாரனையில் ஓட்டேரி விரிவு பகுதியை சேர்ந்த முதியவர் குமார் (66) என்பதும் வெகு நாட்களாக கேன்சர் நோயினால் பாதிக்கபட்டு வந்தவர் நோயின் தீவிர தாக்கம் காரணமாக விரக்தியில் கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி மின்சார ரயில் வந்துகொண்டிருந்த போது திடிரென தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரனையில் தெரிய வந்துள்ளது.

Exit mobile version