Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சூடு பிடிக்கும் இட ஒதுக்கீடு பிரச்சனை! முதல்வர் தொகுதியில் முக்கிய நபர் தற்கொலைக்கு முயற்சி

#image_title

சூடு பிடிக்கும் இட ஒதுக்கீடு பிரச்சனை! முதல்வர் தொகுதியில் முக்கிய நபர் தற்கொலைக்கு முயற்சி

கர்நாடகாவில் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மடாதிபதி திடீரென தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு.

கர்நாடகாவில் சமீபத்தில் அரசு கொண்டு வந்த உள் இட ஒதுக்கீடு விவகாரம் பல்வேறு சமுதாயத்தினரிடையே அதிருச்சியை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாரா, லம்பாணி, இஸ்லாமியர்கள் பலரும் அரசின் இந்த இட ஒதுக்கீடு விவகாரத்தில் தங்கள் அதிருப்தியை போராட்டம் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடக முதல்வர் பசவ ராஜ் பொம்மையின் தொகுதியிலேயே பஞ்சாரா சமுகத்தை சேர்ந்த மடாதிபதி ஒருவர், இட ஒதுக்கீடு முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த தொகுதியான ஷிக்காவ் தொகுதியில், பஞ்சார சமூகத்தை சேர்ந்த குண்டூர் பஞ்சராபீட திப்பேஸ்வர சுவாமி தலைமையில், இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின் போது அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்த மடாதிபதி திடீரென பொது இடத்தில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத அங்கிருந்து மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுவரை மக்கள் போராட்டமாக இருந்து வந்த சூழலில் தற்போது மடாதிபதிகளும் களம் இறங்க தொடங்கியுள்ளதால் பாஜகவிற்கு வரும் தேர்தலில் நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

Exit mobile version