ரஞ்சித் செய்த வேலையால் தங்கலான் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்.. ரஜினி ரசிகர்களின் கோபம் குறையுமா..?? 

0
232
Due to the work done by Ranjith, Thangalan film got in trouble.. Will the anger of Rajini fans decrease..??

ரஞ்சித் செய்த வேலையால் தங்கலான் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்.. ரஜினி ரசிகர்களின் கோபம் குறையுமா..??

இயக்குனர் பா ரஞ்சித்திற்கு எதிராக ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சோசியல் மீடியா முழுவதும் நன்றி கெட்ட ரஞ்சித் என்ற ஹேஷ் டேக் தான் டிரெண்டிங்கில் உள்ளது. இப்படி ரஜினி ரசிகர்கள் கொதிதெழ ரஞ்சித் மட்டுமே காரணம். அவர் செய்த ஒரு தவறு தான் இன்று அவருக்கு எதிராக புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் ரஞ்சித்தின் திரைவாழ்க்கையில் காலா மற்றும் கபாலி ஆகிய இரு படங்களுமே பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தன. அதற்காக அவருக்கு ரஜினி வாய்ப்பளித்து ரஞ்சித்தை கெரியரில் தூக்கி விட்டு அழகு பார்த்தார். ஆனால் இப்போது வளர்ந்ததும் தன்னை தூக்கி விட்ட நன்றி கூட இல்லாமல் ரஜினியை கேலி செய்து ரஞ்சித் சிரித்துள்ள சம்பவம் தான் ரஜினி ரசிகர்களின் கோபத்திற்கு காரணம்.

இது ஒருபுறம் இருக்க ரஞ்சித் செய்த இந்த செயலால் அவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படம் பெரிய சிக்கலில் உள்ளது. ஏனெனில் ஏற்கனவே இப்படம் எப்போதோ வெளியாக வேண்டியது. ஆனால் சில காரணங்களால் இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையில் ரஞ்சித் வேறு இப்படி ஒரு சம்பவத்தை செய்துள்ளார்.

இந்த சூழலில் தங்கலான் படம் வெளியானால் அவ்வளவு தான் ரஜினி ரசிகர்கள் இருக்கும் வெறியில் நிச்சயம் படத்தை ஓட விட மாட்டார்கள். இதனால் விக்ரம் தான் கடும் அதிருப்தியில் உள்ளாராம். ஏனெனில் அவர் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்துள்ளார். ஆனால் இப்படி ஒரு சிக்கலில் சிக்கி இருப்பதால் என்ன செய்வதென தெரியாமல் தவித்து வருகிறாராம்.

இந்நிலையில், ரஞ்சித் இதுகுறித்து விளக்கம் அளித்து ஒரு வீடியோ வெளியிட்டால் மட்டுமே இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. ஆனால், ரஞ்சித் அதை செய்வாரா என்பது சந்தேகமாக உள்ளது. மேலும் இந்த பிரச்சனையை அவர் எப்படி சமாளிக்க போகிறார் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.