Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருமண தடைக்கு இதுவும் காரணமா? தடையை நீக்க எளிய பரிகாரம்

durgai-amman-valipadu

durgai-amman-valipadu

திருமண தடைக்கு இதுவும் காரணமா? தடையை நீக்க எளிய பரிகாரம்

மக்களில் சிலருக்கு அவர்களது முன்னோர்கள் செய்த வினைகளால் தெய்வ குற்றம் உருவாகி இருக்கும். தற்காலத்தில் பலருக்கும் அது தெரியாமல் கூட இருக்கலாம். அதே போல தற்போது பெரும்பாலான பக்தர்களுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சனைகளில் முக்கியமானது திருமண தடை பிரச்னையும் முக்கியமானது. பெரும்பாலான இளைஞர்களுக்கு திருமணம் தள்ளிப் போக காரணமாக உள்ள இந்த திருமண தடையை நீக்க எராளமான பரிகாரங்கள் உள்ளன.

குறிப்பாக ஜாதக நீதியான குறைகளை தான் பெரும்பாலான ஜோதிடர்கள் கூறி அதற்கான பரிகார முறைகளையும் செய்ய சொல்வார்கள். ஆனால் சிலரின் திருமண தடைக்கு தெய்வ குற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இப்பிறவியில் அவருக்கு தெரிந்தோ, தெரியாமலோ ஏதாவது தெய்வ குற்றம் செய்து இருக்கலாம். அவர் ஏதும் செய்யவில்லை என்றாலும், அவரது பெற்றோர் அல்லது முன்னோர்கள் தெய்வ குற்றம் ஏற்படும் அளவிற்கு எதாவது செய்து இருப்பார்கள்.

இந்நிலையில் இது போன்ற தெய்வ குற்றங்களால் கூட சிலருக்கு திருமணம் கைகூடி வராமல் தொடர்ந்து தள்ளி சென்று கொண்டே இருக்கும். மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் தோஷம் என்பது பெரும்பாலும் பொதுவானது. ஆனால் சிலருக்கு எந்த தோஷமும் இன்றி தொடர்ந்து திருமணம் தடைப்பட்டு கொண்டே வரும். மேலும் இதுமட்டுமில்லாமல் சிலருக்கு எந்த வேலையை தொடங்கினாலும் அதில் எதாவது தடைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். இது போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகி வருபவர்களுக்கு தான் இந்த பரிகாரம்.

இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் துர்க்கை அம்மன் சன்னதியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை நாளும் ராகு காலத்தில் காலை பத்தரை மணி முதல் பணிரெண்டு மணிக்குள்ளாக தாமரைத் தண்டினால் செய்யப்பட்ட திரியை கொண்டு நெய் தீபம் ஏற்றி அவர்களது கோரிக்கைகளை அம்மனிடம் வைத்து வழிபட்டு வந்தால் அவர்களுக்கு உண்டான தெய்வக் குற்றம் நீங்கும். மேலும் அவர்களுக்கு சாபத்தினால் ஏற்பட்ட தோஷங்களும் நீங்கும்.

இவ்வாறு தெய்வ குற்றம் மற்றும் சாபத்தை போக்கும் மிகவும் சக்தி வாய்ந்த இந்த துர்க்கை அம்மன் வழிபாட்டை செய்து அனைவரும் பயனடையலாம். திருமண தடை மற்றும் தொழில் தடைகளுக்கு காரணமாக உள்ள தெய்வக்குற்றம் மற்றும் சாபம் நீங்குவதற்கான எளிய பரிகாரமும் இது தான்.

Exit mobile version