இப்படி ஒரு நாட்டில் தான் வாழ்கிறோம்! நடிகை ராதிகா ஆப்தே வருத்தம்!!

0
243
#image_title

இப்படி ஒரு நாட்டில் தான் வாழ்கிறோம்! நடிகை ராதிகா ஆப்தே வருத்தம்!!

ஆணாதிக்கம் அதிகம் உள்ளதாக நடிகை ராதிகா ஆப்தே வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராதிகா ஆப்தே. 2012 ஆம் ஆண்டு வெளியான தோனி என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான ராதிகா ஆப்தே அதன் பிறகு தமிழில் ஆல்-இன்-ஆல் அழகுராஜா, சித்திரம் பேசுதடி-2 போன்ற படங்களிலும் நடித்தார். கபாலி என்ற படத்தின் மூலம், நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார்.

இந்தி படங்களில் நடிக்கும் ராதிகா ஆப்தே அவர்கள், அதில் அதிகம் கவர்ச்சி காட்டுவதில் தயங்குவதில்லை.

தமிழ் படங்களை விட, இந்தி படங்களிலும், இந்தி வெப் சீரிஸ்களிலும் அதிகம் கவனம் செலுத்தும் ராதிகா ஆப்தே, பல்வேறு சினிமா ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராதிகா ஆப்தே, சினிமாவில் பெண்களுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், “ஆணாதிக்கம் அதிகம் உள்ள ஒரு நாட்டில்தான் நாம் வாழ்கிறோம். பல பெண்கள் தங்கள் குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க இரவு பகலாக உழைக்கிறார்கள். ஆனால் இன்னும் கவனிக்கப்படாமல் இருக்கிறார்கள். அது போன்று ஒரு கதாபாத்திரம் தான் துர்கா” என்றார்.

மேலும், “இப்போது உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. அதாவது சம உரிமை, சம ஊதியம், சமமான வேலை வாய்ப்புகள், சமமான அங்கீகாரம் ஆகியவற்றுக்காக அனைவரும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

திரைத்துறை, சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளின் பிரதிபலிப்பாகவே இருந்து வருகிறது” என்றார்.