தமிழகம் முழுவதும் மாவட்ட மற்றும் மாநில எல்லைகளுக்குள் சென்று வர இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யப்போவதாக தலைமைச் செயலாளர் அலுவலகம் இன்று ஆலோசனை நடத்துகிறது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை உயரதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் என்று மதியம் ஆலோசனை நடத்துகிறார்.
ஏற்கனவே அனைத்து மாநிலங்களுக்கும் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரி மத்திய உள்துறை அமைச்சகம் அந்தந்த மாநில செயலாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.
சரக்கு மற்றும் தனிநபர் பொதுமக்கள் போக்குவரத்துக்கு இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டுமென உள்துறை அமைச்சகம் கூறியதையடுத்து, அரசின் போக்குவரத்து கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றாமல் இருப்பது மத்திய அரசு விதிமுறைகளை மீறும் செயலாக இருக்கும் என மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் உத்தரவின்படி, இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்வதாக புதுச்சேரி மாநில அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.