Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மனிதர்களின் இந்த செயலால் தனது அச்சிலிருந்து சாய்ந்த பூமி! மோசமான பாதிப்புகள் ஏற்படும் என  விஞ்ஞானிகள் விடுத்த எச்சரிக்கை 

Earth tilted from its axis by this action of humans! Scientists have warned that there will be bad effects

மனிதர்களின் இந்த செயலால் தனது அச்சிலிருந்து சாய்ந்த பூமி! மோசமான பாதிப்புகள் ஏற்படும் என  விஞ்ஞானிகள் விடுத்த எச்சரிக்கை! 

மனிதர்கள் செய்கின்ற இந்த தவறினால் பூமியானது தனது அச்சிலிருந்து சாய்வதால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புவியானது தனது அச்சில் சுழல்வதோடு தோராயமாக 366.26  முறை சூரியனையும் சுற்றி வருகிறது.  பூமியின் அச்சு சாய்ந்திருப்பதால், பூமியின் மேற்பரப்பில் விழும் சூரிய ஒளியின் அளவு வெவ்வேறு இடங்களில் பெரிதும் வேறுபடுகின்றது. இது பல காலம் சார்ந்த தட்பவெப்பநிலை மாற்றங்களை, ஏற்படுத்துகின்றது. மேலும் புவியின் சாய்வு கோணம் பல காலங்களுக்கு நிலையாக இயங்கக்கூடியது. ஆனால் தற்போது மனிதர்கள் செய்த காரியத்தினால் புவியின் சாய்வில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் தற்போது நடத்தியுள்ள ஆய்வில் புவியிலிருந்து அளவுக்கு அதிகமான நிலத்தடி நீரினை தனது தேவைக்காக  மனிதன் உறிஞ்சி எடுத்ததால் பூமி தனது அச்சில் இருந்து 80 செ.மீ  அளவுக்கு கிழக்கில் கீழாக சாய்ந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த 1993-2010 க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் சுமார் 2150 ஜிகா டன்கள் தண்ணீரை மனிதன் தனது பயன்பாட்டிற்கு பூமியிலிருந்து உறிஞ்சியுள்ளான் .

இது சுமார் 6மி.மீ க்கும் அதிகமான கடல் மட்ட உயர்வுக்கு சமம் என ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் என்ற இதழ் வெளியிட்டிருக்கும் ஆராய்ச்சி  கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டத்தை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி எடுப்பது பூமியின் சுழற்சியை பாதிக்க தொடங்கி இருப்பதாக ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு புவியியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து இருந்தனர். ஆனால் அப்போது அதற்கான சரியான புள்ளி விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை.

இந்நிலையில் தற்போது கிடைத்த விவரங்கள் படி 1993-2010 இடைப்பட்ட காலத்தில் புவியின் அச்சு 80 செ.மீ அளவு கிழக்கு பகுதியில் சாய்ந்து இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த சாய்வினால் புவியின் காலநிலையில் மிகப் பெரிய அல்லது மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version