Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்; 3 பேர் பலி, 1000 த்திற்கும் மேற்பட்டோர் படுகாயம்!

#image_title

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்; 3 பேர் பலி, 1000 த்திற்கும் மேற்பட்டோர் படுகாயம்!

துருக்கியில் 6.4 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 46,000 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த சோகத்தில் இருந்து மீண்டு வருவதற்குள் துருக்கி, சிரியாவில் நேற்று இரவு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக உள்ளது.

ஹடாய் மாகாணத்தில் அண்டக்யா என்ற இடத்தில் நேற்று இரவு 8.04 மணிக்கு 6.4 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 கி மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1000 த்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளான சிரியா, எகிப்து, லெபனான் ஆகிய இடங்களிலும் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் போது, கட்டிடங்கள் குலுங்கியதால் இரவு நேரத்தில் வீடுகளில் தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் அச்சத்துடன் வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். 

Exit mobile version