Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டெல்லியில் நிலநடுக்கம் ஏற்படுமா? அதிசய மனிதர் கணிப்பால் பரபரப்பு!

உத்தரபிரேதச மாநிலத்தில் நிலநடுக்கத்தை கணிக்கும் அதிசய மனிதர் டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பகுதியை அடுத்த சித்தன்புரா என்னும் கிராமத்தில் வசித்துவரும் ஷகில் அகமது என்ற நபர் அட்டைப் பெட்டிகளை தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் நிலநடுக்கங்களை பற்றிய ஆராய்ச்சிகளிலும், மேககங்களை பற்றிய ஆராய்ச்சிகளிளும் அதிகம் ஈடுபட்டு வருவார்.

சிறு வயதில் விளையாட்டாக ஆரம்பித்த இவர், தற்போது நிலநடுக்கங்களை துல்லியமாக கணிக்க கூடிய அளவிற்கு வளர்ந்து விட்டார். இதுபற்றி அவர் கூறுகையில், நான் கூறும் நிலநடுக்கங்கள் ரீதியான கருத்துக்கள் அனைத்தும் அறிவியல் பூர்வமானவை. கற்பனை கதைகள் அல்ல. ஒரு இடத்தில் நிலநடுக்கம் ஏற்படும் சமயத்தில் மேகங்கள் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் தன்னை மாற்றிக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

இதனை என்னால் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியும் எனவும் கூறினார். உதாரணமாக  2001 மற்றும் 2005 ஆம் ஆண்டில் குஜராத் மற்றும் காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கம், உலகத்தின் பிற பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் என அனைத்தையும் கணித்து சர்வதேச பேரிடர் அமைப்பு மற்றும் அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் ஆகியவற்றில் இ-மெயில் மூலம் தகவல் கொடுத்ததாகவும், ஆனால் அவர்களிடமிருந்து முறையான பதில் வராமல் தான் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல், இந்தியாவில் இருக்கக்கூடிய பல ஊடகத்துறையினரிடமும் எனது கருத்துக்களை அறிவியல் பூர்வமாக நிரூபித்து நான் உணர்த்திய பிறகு தனக்கு அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சந்திர கிரகணத்தின் மேகங்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளதாகவும், ஆகவே வரக்கூடிய நாட்களில் டெல்லியில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version