லடாக்கின் கார்கில் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த
நிலநடுக்கம் இன்று அதிகாலை சரியாக 3.37 மணி அளவில் உணரப்பட்டது.மேலும்
ரிக்டர் அளவாக இந்த நில நடுக்கத்தின் அளவு பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் நில நடுக்கம் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது.ராஜஸ்தானின் அல்வர் மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டது மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.டில்லி என்.சி.ஆர் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இங்கு ஜூலை
3 ஆம் தேதி மாலை 7 மணி அளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் ஹரியானா குருகிராம் பகுதியிலும் நில அதிர்வு ஏற்பட்டது,இந்த அதிர்வு ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.
குருகிராம் பகுதியில் நில அதிர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கடந்த ஒரு மாதத்தில் டில்லி என்.சி.ஆர் பகுதியிலும் தொடர்ந்து நில அதிர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் தற்பொழுது பெரிய அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டதா என்பது குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.