கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் அளவு 3.3 டிரெக்டராக பதிவாகியுள்ளது என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களிடையே பதற்றமான சூழ்நிலை உண்டாகியுள்ளது.
நேற்று பிற்பகலில் சரியாக 1.32 மணி அளவில் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலநடுக்கம் கண்டறியப்பட்டாலும் மக்களுக்கு பெரிதளவில் எந்தவித பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மீண்டும் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
இதனை அடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் தங்களுடைய இயல்பு வாழ்க்கையில் நுழைந்த வாழ ஆரம்பித்துவிட்டனர். எனினும் மீண்டும் இதுபோன்ற நில அதிர்வுகள் வந்துவிடுமோ என்ற பயம் மக்கள் மனதில் இருந்து கொண்டு தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் சாலைகளில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் நில அதிர்வின் காரணமாக தடுமாறி விழுந்தன என்ற செய்தியும் வெளியாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த நில அதிர்வானது கிருஷ்ணகிரி மட்டுமின்றி ஓசூர் அரூர் தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் உணரப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.