உங்களில் பலர் குதிகால் பகுதியில் வெடிப்பு பாதிப்பால் அவதியடைந்து வருவீர்கள்நீண்ட நேரம் தண்ணீரில் இருப்பது,கெமிக்கல் சோப்பினால் ஏற்படும் அலர்ஜி உள்ளிட்ட காரணங்களால் குதிகாலில் வெடிப்பு ஏற்படுகிறது.வறண்ட சருமம் கொண்டிருப்பவர்களுக்கு குதிகால் வெடிப்பு ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.இந்த குதிகால் வெடிப்பை குணமாக்க கீழ்கண்ட வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றலாம்.
வீட்டு வைத்தியம் 01:
ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை மற்றும் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து குதிகாலில் பூசி வந்தால் வெடிப்பு மறையும்.
வீட்டு வைத்தியம் 02:
தேங்காய் எண்ணையை குதிகால் பகுதியில் அப்ளை செய்து வந்தால் வெடிப்பு மறைந்து பாதாம் மிருதுவாக காட்சியளிக்கும்.
வீட்டு வைத்தியம் 03:
தேவையான அளவு வேப்பிலை பேஸ்ட் எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து பாத வெடிப்பில் பூசி வந்தால் சில தினங்களில் தீர்வு கிடைக்கும்.
வீட்டு வைத்தியம் 04:
ஒரு வாழைபழத் தோல்,ஒரு தேக்கரண்டி தேன்,ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் ஒரு தேக்கரண்டி தயிரை மைய அரைத்து பாத வெடிப்புகள் மீது பூசி வந்தால் உரிய பலன் கிடைக்கும்.
வீட்டு வைத்தியம் 05:
சிறிதளவு கடுகு எண்ணையை பாத வெடிப்பின் மீது பூசி வந்தால் அவை சில தினங்களில் குணமாகும்.
வீட்டு வைத்தியம் 06:
மருதாணி பொடி,தேங்காய் எண்ணெய் மற்றும் டீத் தூள் நீரை கலந்து பாத வெடிப்பின் மீது பூசி வந்தால் ஓரிரு வாரங்களில் வெடிப்பு மறைந்து பாதம் மிருதுவாக காட்சியளிக்கும்.அதேபோல் மருதாணி பேஸ்ட்டில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து பாத வெடிப்பின் மீது பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.