எந்த ஒரு கெமிக்கல் டை இல்லாமல் ஈஸியான முறையில் முடியை கருமையாக மாற்றலாம்!!

0
171
Easy way to darken hair without any chemical dye!!

வயது முதுமையில் ஏற்படக் கூடிய நரைமுடி பிரச்சனையை இன்றைய தலைமுறையினர் இளம் வயதிலேயே சந்தித்து வருகின்றனர்.இளம் வயதிலேயே அதிகமாக முடி நரைத்து விட்டால் வயதானவர் போல் மறைவிடுவோம்.

மன அழுத்தம்,ஹார்மோன் பிரச்சனை,தவறான உணவுப் பழக்கம்,கெமிக்கல் பொருட்கள் பயன்பாடு போன்ற காரணங்களால் இளம் வயதில் கருமை முடி வெள்ளையாகி விடுகிறது.நரை முடி எட்டி பார்த்து விட்டால் உடனே கெமிக்கல் டையை நாடாமல் வீட்டிலேயே இயற்கை ஹேர் டை தயாரித்து பயன்படுத்தலாம்.

தேவைப்படும் பொருட்கள்

1)காபி பொடி – ஒரு ஸ்பூன்
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பிறகு ஒரு ஸ்பூன் காபி பொடியை அதில் சேர்த்து 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் காய்ச்சவும்.

இந்த காபி தண்ணீரை ஆறவிட்டு தலைக்கு அப்ளை செய்யவும்.20 நிமிடங்கள் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசவும்.

காபி பொடியில் டானின்கள் நிறமிகள் நிறைந்திருக்கிறது.இது தலை முடியை வெள்ளை நிறத்தில் இருந்து பழுப்பு நிறத்திற்கு மாற்றும்.

தேவைப்படும் பொருட்கள்

1)டீ தூள்
2)தண்ணீர்

செய்முறை

ஒரு கிளாஸ் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி ஒரு ஸ்பூன் டீ தூள் சேர்த்து 1/4 கிளாஸ் அளவு வரும் அளவிற்கு சுண்டக் காய்ச்சவும்.இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஆறவிடவும்.பிறகு தலையில் அப்ளை ஒரு மணி நேரத்திற்கு பிறகு குளிக்கவும்.இப்படி செய்தால் நரை முடி கருப்பாக மாறும்.

தேவைப்படும் பொருட்கள்

1)மருதாணி பொடி
2)நெல்லிக்காய் பொடி
2)எலுமிச்சை சாறு

செய்முறை

ஒரு இரும்பு கிண்ணத்தில் 20 கிராம் மருதாணி பொடி,20 கிராம் நெல்லிக்காய் பொடி மற்றும் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.இதை ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் தலைக்கு அப்ளை செய்து குளித்தால் வெள்ளை முடி கருமையாகும்.