Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தலை நரைமுடியை கருமையாக மாற்ற எளிதான வழிமுறைகள்!!

#image_title

தலை நரைமுடியை கருமையாக மாற்ற எளிதான வழிமுறைகள்!!

தலைநரையானது வயதானதற்கு பிறகு வரக்கூடிய ஒரு சாதாரணமான ஒன்று. ஆனால் இப்பொழுது வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என அனைவருக்கும் இந்த பிரச்சனை நீடித்து வருகிறது.

இந்த பிரச்சினையில் இருந்து விடுபட ஏராளமானோர் அதிக ரசாயனம் நிறைந்த எண்ணெய்கள் மற்றும் டை, போன்றவற்றை பயன்படுத்தி இன்னும் தலை நரையை அதிகப்படுத்திக் கொள்கின்றனர்.

இந்த நரைமுடி பிரச்சனையிலிருந்து விடுபட வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி மட்டுமே எளிதாக தீர்வுக் காணலாம்.

தேவையான பொருள்கள்:
1. மஞ்சள் தூள்
2. கத்தாழை ஜெல்

செய்முறை:
1. சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் கற்றாழை ஜெல்லை ஒரு டம்ளர் சாதாரண தண்ணீரில் சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும்

2. இந்த நீரை வாரத்தில் இரண்டு நாட்கள் முடியின் வேர் பகுதியில் மெதுவாக தேய்த்து மசாஜ் செய்து கொள்ளவும்.அதன் பின் ஒரு மணி நேரம் தலையில் ஊற வைக்க வேண்டும்.

3. இதே போல் தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு தடவி வந்தால் இந்த தலை நரை பிரச்சனையிலிருந்து எளிதாக விடுபடலாம்.

4. இதை ஒரு வாரத்திற்கு இரண்டு நாட்கள் வீதம் பயன்படுத்தினால் நல்ல தீர்வை காண முடியும்.

Exit mobile version