முடிக்கு சாயம் பூசும்போது சருமத்தில் சாயம் ஒட்டிவிட்டதா? இனி கவலை வேண்டாம் இதை செய்யுங்கள் !

0
155

இன்றைய காலகட்டத்தில் ஆண்களும், பெண்களும் தங்களை அழகாக கட்டிக்கொள்ளவே விரும்புகின்றனர், 40 வயதிற்கு மேற்பட்ட மக்கள் பலரும் தங்கள் தலைக்கு ஹேர்டை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். தலையில் நரை இருந்தால் அது தங்களை வயதானவராக காட்டிவிடும் என்பதால் மக்கள் பலரும் தங்கள் முடிக்கு சாயம் பூசுகின்றனர். அப்படி பூசுகையில் சிலரது சருமத்தில் அந்த சாயம் ஒட்டிக்கொள்ளும், அதனை நீக்க பலரும் கஷ்டப்படுவார்கள். இனிமேல் அதுபற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம், கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பின்பற்றினால் நொடிப்பொழுதில் சருமத்தில் ஒட்டியுள்ள சாயத்தை போக்கலாம்.

1) இயற்கையான ஆலிவ் எண்ணெய் சிறந்த க்ளென்சராக பயன்படுகிறது, சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு இது சிறந்த ஒன்றாக இருக்கிறது. ஒரு காட்டன் துணியில் ஆலிவ் எண்ணெயை எடுத்து சருமத்தில் சாயம் பட்ட இடத்தில் தேய்க்க வேண்டும், பின்னர் எண்ணெயை தேய்த்து 8 மணி நேரம் ஊறவைத்து கழுவினால் சாயம் போய்விடும்.

2) ரப்பிங் ஆல்கஹாலை பயன்படுத்தியும் உங்கள் சருமத்தில் ஒட்டிக்கொண்ட சாயத்தை போக்க முடியும். ரப்பிங் ஆல்கஹாலுடன் சிறிது சோப்பு தண்ணீர் சேர்த்து சாயம் உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். அதன்பின்னர் சருமத்தை சோப்பு போட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

3) பலவிதமான கறைகளை போக்குவதில் நாம் பல்துலக்க பயன்படுத்தும் பற்பசை முக்கிய பங்கு வகிக்கின்றது. நீங்கள் பயன்படுத்தும் எந்தவித பற்பசையாக இருந்தாலும் சரி அதனை பயன்படுத்தல் சருமத்தில் ஒட்டிக்கொண்ட சாயத்தை நீங்கள் போக்கலாம்.

4) மேக்கப்பை நீக்க பயன்படுத்தும் மேக்கப் ரிமூவர் அல்லது பேக்கிங் சோடா போன்றவற்றை பயன்படுத்தியும் சருமத்தில் தவறுதலாக ஒட்டிக்கொண்ட சாயத்தை நீங்கள் நீக்கலாம்.