எலும்புகளை எக்கு போல் உறுதியாக்க இதை ஒரு உருண்டை சாப்பிடுங்கள்!

0
210
#image_title

எலும்புகளை எக்கு போல் உறுதியாக்க இதை ஒரு உருண்டை சாப்பிடுங்கள்!

உடலில் உள்ள எலும்புகளை வலிமையாக்க ராகியால் செய்யப்பட்ட உணவுகளை உண்பது நல்லது. ஆனால் ஒரு சிலருக்கு ராகி பிடிக்காமல் இருக்கும். இதனால் ராகியுடன் வேர்க்கடலை, எள் சேர்த்து இனிப்பு உருண்டைகளாக செய்து சாப்பிட்டு வரலாம்.

தேவையான பொருட்கள்:-

1)ராகி மாவு – 1 கப்
2)நெய் – 3 தேக்கரண்டி
3)வெல்லம் – 1/2 கப்
4)எள் – 3 தேக்கரண்டி
5)வேர்க்கடலை – 1/4 கப்
6)ஏலக்காய் – 2
7)பாதாம் பருப்பு – 15
8)பேரிச்சம் பழம் – 5

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 1 கப் ராகி மாவு சேர்க்கவும். அதன் பின்னர் 2 தேக்கரண்டி நெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

பிறகு இதை தோசை கல்லில் வைத்து அடை போல் தட்டி சுட்டெடுத்து கொள்ளவும். பிறகு சுட்ட ராகி அடையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி நெய் சேர்க்கவும். பிறகு அதில் வேர்க்கடலை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் எள்ளை போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு மிக்ஸி ஜார் எடுத்து ராகி துண்டுகளை போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். அதன் பின்னர் அதில் எள் சேர்த்து அரைத்து ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து வறுத்த வேர்க்கடலை, பாதாம் பருப்பு, ஏலக்காய் மற்றும் வெல்லம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இறுதியாக பேரிச்சம் பழம் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதை அரைத்து வைத்துள்ள ராகி மாவில் சேர்த்து கையில் நெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.

இந்த ராகி உருண்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எலும்பு பல மடங்கு வலிமை பெறும்.