ஒரே வாரத்தில் தொந்தி குறைய.. வெறும் வயிற்றில் இந்த பொடி ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

0
214
Eat a spoonful of this powder on an empty stomach to reduce anxiety in one week!!

சிலருக்கு உடல் தேகம் ஒல்லியாக காணப்பட்டாலும் வயிற்றுப் பகுதி மட்டும் பெருத்து இருக்கும்.இதை தொப்பை அல்லது தொந்தி என்பார்கள்.வயிற்றில் கெட்ட கொழுப்பு அதிகமாக சேர்வதால் தொப்பை உருவாகிறது.இந்த தொப்பையை குறைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)கறிவேப்பிலை – அரை கப்
2)சீரகம் – அரை கப்

செய்முறை விளக்கம்:

முதலில் அரை கப் அளவிற்கு கறிவேப்பிலை இலையை நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

கறிவேப்பிலை மொருமொரு பதத்திற்கு காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அரை கப் அளவிற்கு சீரகத்தை மிக்சர் ஜாரில் போட்டு காயவைத்த கறிவேப்பிலையை சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பவுடரை டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.

மேலே சொல்லப்பட்டுள்ள அளவுபடி அரைத்தால் 15 நாட்கள் வரை வைத்து பயன்படுத்த முடியும்.இந்த கறிவேப்பிலை சீர்கப் பொடியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் வயிற்று பகுதியில் உள்ள கெட்ட கொழுப்பு முழுமையாக குறைந்துவிடும்.இந்த கறிவேப்பிலை சீரகத்துடன் ஓமத்தை சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

1)தான்றிக்காய் பொடி – 25 கிராம்
2)நெல்லிக்காய் பொடி – 25 கிராம்
3)கடுக்காய் பொடி – 25 கிராம்

செய்முறை விளக்கம்:

தான்றிக்காய் பொடி,நெல்லிக்காய் பொடி மற்றும் கடுக்காய் பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.மேலே சொல்லப்பட்டுள்ள அளவுபடி வாங்கிக் கொள்ளவும்.

பிறகு இந்த மூன்று பொடியையும் ஒன்றாக மிக்ஸ் செய்து ஒரு பாட்டிலில் கொட்டி அடைத்துவிடவும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தி டம்ளரில் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் கலந்து வைத்துள்ள பொடி ஒரு தேக்கரண்டி அளவு கலந்து குடிக்கவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தொப்பை கொழுப்பு உருகிவிடும்.

தேவையான பொருட்கள்:

1)ஆமணக்கு வேர் – சிறிதளவு
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

ஆமணக்கு வேர் சிறிதளவு எடுத்து தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை உரலில் போட்டு இடித்து கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.

அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து ஒரு இரவு ஊறவிடவும்.மறுநாள் காலையில் ஆமணக்கு வேரை நீக்கிவிட்டு சாறை மட்டும் பருகவும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பு கரைந்துவிடும்.