5 நிமிடத்தில் வாய்ப்புண்ணை குணமாக்க நெல்லிக்காய் பொடியை இப்படி சாப்பிடுங்கள்!!
வயிற்றில் அல்சர் இருந்தால் வாயில் புண்கள் உருவாகி அவை தீராத பாதிப்பை ஏற்படுத்தும்.எனவே சூடான பானங்கள் மற்றும் உணவுகள் எடுத்துக் கொள்வதை முழுமையாக தவிர்க்கவும்.
அது மட்டுமின்றி வாய் அல்சர் புண் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றவும்.
தேவையான பொருட்கள்:-
1)பெரு நெல்லிக்காய் – இரண்டு
2)தான்றிக்காய் – ஒன்று
3)கடுக்காய் – ஒன்று
செய்முறை:-
முதலில் இரண்டு நெல்லிக்காய்,ஒரு தான்றிக்காய் மற்றும் ஒரு கடுக்காயை நன்கு உலர்த்தி பொடி செய்து கொள்ளவும்.இல்லையேல் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய திரிபலா சூரணம் வாங்கிக் கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அரைத்த திரிபலா சூரணம் ஒரு தேக்கரண்டி அளவு அதில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் வாய்ப்புண் பாதிப்பு குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)சுண்டைக்காய்
2)தயிர்
செய்முறை:-
100 கிராம் அளவு சுண்டைக்காயின் காம்பு மற்றும் விதைகளை நீக்கி நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.
அதன் பிறகு ஒரு கிண்ணத்தில் 100 மில்லி தயிர் எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் அரைத்த சுண்டைக்காய் வற்றல் பொடியை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் பாதிப்பு குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)சின்ன வெங்காயம்
2)தேன்
செய்முறை:-
இரண்டு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு அதை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.
இதை ஒரு கிண்ணத்தில் போட்டு ஒரு தேக்கரண்டி தூயத் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் பாதிப்புக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.