உடலில் அதிகப்படியான கொழுப்பு தேங்குவதை தான் உடல் பருமன் என்று சொல்கிறோம்.ஆரோக்கியமற்ற உணவுகளால் உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகளவு சேர்ந்து நோய் பாதிப்புகளுக்கு வழி வகுக்கிறது.
எண்ணெய் உணவுகள்,கொழுப்பு உணவுகள்,அசைவ உணவுகள்,அதிக கலோரி நிறைந்த உணவுகள்,நெய் மற்றும் வெண்ணெயில் செய்யப்பட்ட உணவுகள்,மைதா உணவுகள் போன்றவை உடல் எடையை எளிதில் அதிகரிக்கிறது.நீங்கள் அதிக உடல் பருமனால் அவதிப்படுகிறீர்கள் என்றால் இதை காய்கறிகள் மூலம் எளிதில் குறைத்து விட முடியும்.
வைட்டமின்,தாதுக்கள்,கலோரிகள்,ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.
1)பசலைக் கீரை
இதில் இரும்பு,நார்ச்சத்து,பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.பசலைக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய்,இதய நோய்,புற்றுநோய்கள் போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபட முடியும்.பசலைக் கீரை சாப்பிடுவதால் உங்கள் உடல் எடை சுலபமாக குறைந்தவிடும்.
2)ப்ரோக்கோலி
இதில் கால்சியம்,வைட்டமின் சி,கே மற்றும் இரும்புச்சத்து நிரம்பியிருக்கிறது.இந்த பச்சை காய்கறி உடல் எடை இழப்பிற்கு உதவுகிறது.
3)குடைமிளகாய்
இதில் வைட்டமின் சி,ஈ, பி 6,டயட் ஃபைபர் மற்றும் போலேட் நிறைந்திருக்கிறது.இது உடல் எடையை எளிதில் குறைக்கும் ஆற்றல் கொண்டது.
4)தக்காளி
நீங்கள் விரும்பி உண்ணும் காய்கறிகளில் ஒன்று தக்காளி.இதை உணவாக அல்லது ஜூஸாக சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் நீங்கும்.
5)வெள்ளரிக்காய்
நீர்ச்சத்து நிறைந்த காய்கறியாக வெள்ளரியை சாப்பிடுவதால் உடல் எடை குறையும்.
6)பூசணிக்காய்
உடல் எடை இழப்பிற்கு பூசணிக்காய் சிறந்த தீர்வாக இருக்கிறது.இதில் குறைந்த கலோரிகள் இருப்பதால் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
7)ஆரஞ்சு பழம்
இந்த பழத்தில் அதிகளவு வைட்டமின் ஏ,சி,நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.இதை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.