Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தாங்க முடியாத தலைவலியை நொடியில் விரட்ட டாக்டர் சொன்ன அற்புத லேகியம் சாப்பிடுங்க!!

நம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் முக்கிய பாதிப்பு தலைவலி.பல்வேறு காரணங்களால் இந்த தலைவலி பாதிப்பை நாம் சந்திக்கின்றோம்.உடல் சோர்வு,தூக்கமின்மை,மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது.இந்த தலைவலி பாதிப்பில் இருந்து மீள வல்லாரை கீரையில் லேகியம் செய்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்:

1)வல்லாரை கீரை – ஒரு கப்
2)திப்பிலி – இரண்டு தேக்கரண்டி
3)சித்தரத்தை – இரண்டு தேக்கரண்டி
4)ஏலக்காய் – ஐந்து
5)மிளகு – இரண்டு தேக்கரண்டி
6)நெய் – நான்கு தேக்கரண்டி
7)சுக்கு – ஒரு துண்டு
8)சீரகம் – இரண்டு தேக்கரண்டி
9)வெல்லம் – 50 கிராம்

செய்முறை விளக்கம்:-

முதலில் அடுப்பில் வாணலி வைத்து சூடாக்க வேண்டும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி திப்பிலி போட்டு லேசாக வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து சித்தரத்தை,சீரகம்,கருப்பு மிளகு ஆகியவற்றை வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு துண்டு சுக்கு மற்றும் ஐந்து ஏலக்காயை நன்றாக நெருப்பில் வாட்டி மிக்சர் ஜாரில் சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இதை ஒரு கிண்ணத்தில் கொட்டி வைக்க வேண்டும்.

அடுத்து மிக்சர் ஜாரில் ஒரு கப் வல்லாரை கீரையை போட்டு தண்ணீர் சேர்த்து விழுது பக்குவத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் வாணலி வைத்து நான்கு முதல் ஐந்து தேக்கரண்டி ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்த வல்லாரை கீரை விழுது சேர்த்து வதக்க வேண்டும்.பின்னர் அரைத்த சுக்கு கலவையை அதில் கொட்டி குறைவான தீயில் கிளற வேண்டும்.

வல்லாரை மற்றும் சுக்கு கலவை பச்சை வாசனை நீங்கும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு 50 கிராம் அளவிற்கு வெல்லத்தை பொடித்து இந்த கலவையில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

கலவை நன்றாக கொதித்து லேகியம் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பிறகு இதை ஆறவைத்து ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த லேகியத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அனைத்துவித தலைவலியும் குறையும்.வல்லாரை லேகியம் செய்ய முடியாதவர்கள் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் ரெடிமேட் லேகியத்தை வாங்கி பயன்படுத்தலாம்.

அதேபோல் அதீத தலைவலி இருப்பவர்கள் ஒரு பாத்திரத்தில் ஆவி பறக்க தண்ணீர் ஊற்றி ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்துவிட்டு ஆவி பிடித்தால் தலைவலி குணமாகும்.

Exit mobile version