Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முடி பொசுபொசுனு வளர இந்த கருவேப்பிலை குழம்பை சாப்பிடுங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!!

#image_title

முடி பொசுபொசுனு வளர இந்த கருவேப்பிலை குழம்பை சாப்பிடுங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!!

நாம் உணவில் சேர்க்கும் கருவேப்பிலையில் அதிகளவு கால்சியம்,இரும்புச் சத்து,நார்ச்சத்து வைட்டமின் ஏ,பி மற்றும் சி நிறைந்து காணப்படுகிறது.இவை இரத்த சோகை,செரிமான பாதிப்பு,உடல் பருமன் உள்ளிட்டவற்றிற்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.அது மட்டும் இன்றி முடி சம்மந்தப்பட்ட பிரச்சனைக்கு கருவேப்பிலை முக்கிய தீர்வாக இருக்கிறது.முடி கருமையாக வளர,அடர்த்தியாக வளர கருவேப்பிலை முக்கிய பொருளாக இருக்கிறது.இந்த கருவேப்பிலையை வைத்து ருசியான குழம்பு செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்

*கருவேப்பிலை – 4 கைப்பிடி அளவு

*உளுந்தம்பருப்பு – 2 தேக்கரண்டி

*கடலை பருப்பு – 2 தேக்கரண்டி

*கொத்தமல்லி விதை – 1 தேக்கரண்டி

*சீரகம் – 1 தேக்கரண்டி

*மிளகு – 1 தேக்கரண்டி

*வெந்தயம் – 1/2 தேக்கரண்டி

*பச்சை மிளகாய் – 2

*சின்ன வெங்காயம் – 100 கிராம்

*பூண்டு – 2கைப்பிடி அளவு

*தக்காளி – 1

*புளி – 1 பெரிய எலுமிச்சை பழ அளவு

*உப்பு – தேவையான அளவு

*மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

*மிளகாய்தூள் – 1 தேக்கரண்டி

*நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி

*வெல்லம் – சிறு துண்டு

*கடுகு – 1 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு மிக்ஸி ஜாரில் 100 கிராம் சின்ன வெங்காயம்,2 பச்சை மிளகாய் மற்றும் 1 தக்காளி சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் கடாய் வைத்து அதில் 2 தேக்கரண்டி கடலை பருப்பு,2 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு சேர்த்து வாசனை வரும் வரை நன்கு வறுக்கவும்.இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் அதில் 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதை,1 தேக்கரண்டி சீரகம்,1 தேக்கரண்டி கருப்பு மிளகு,1/2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும்.பின்னர் 4 கைபிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி அடுப்பை அணைக்கவும்.பின்னர் இதை நன்கு ஆற விடவும்.இவை நன்கு ஆறிய பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைக்கவும்.பின்னர் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள கடலை பருப்பு + உளுந்து பருப்பு சேர்த்து மீண்டும் அரைக்கவும்.

அடுத்து அடுப்பி கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.அவை சூடேறியதும் அதில் 1 தேக்கரண்டி அளவு கடுகு மற்றும் 1/2 தேக்கரண்டி அளவு உளுந்து மற்றும் 1/2 தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்கு பொரிய விடவும்.பின்னர் இரண்டு கைபிடி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்னர் 10 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி விடவும்.அடுத்து அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

பிறகு தேவையான அளவு பெருங்காயத் தூள்,மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.அடுத்து ஊற வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.தேவைப்பட்டால் 1 அல்லது 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கொள்ளலாம்.இறுதியாக வெல்லம் சேர்த்து நன்கு கலக்கி அடுப்பை அணைக்கவும்.

இந்த கருவேப்பிலை குழம்பு சுவை மற்றும் ஆரோக்துடன் இருக்கும்.இதை தொடர்ந்து செய்து சாப்பிட்டு வருவதன் மூலம் தலை முடி நன்கு வளரத் தொடங்கும்.இந்த குழம்பு
சாதம்,இட்லிக்கு சிறந்த காமினேஷனாக இருக்கும்.

Exit mobile version