இந்தக் காயை இளநீருடன் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள்! பசியின்மை பிரச்சனை உடனே குணமாகும்!

0
207

இந்தக் காயை இளநீருடன் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள்! பசியின்மை பிரச்சனை உடனே குணமாகும்!

தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் வேலை மற்றும் அவர்களின் தேவைக்காக ஓடத் தொடங்கியுள்ளனர். அதன் காரணமாக நம் உடலை கண்டு கொள்வதில்லை. சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளாத காரணத்தினால் நம் உடலில் எண்ணற்ற பிரச்சனைகள் உருவாகின்றது.

வெள்ளரிக்காய் என்பது நீர்ச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் இவை பல்வேறு நோய்களுக்கு மருந்தாக அமைந்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம்.

பொதுவாக கோடை காலங்களில் அனைவரும் தேடி அலையும் பழங்களில் முதன்மையான ஒன்று வெள்ளரிக்காய். மேலும்

வெள்ளரிக்காயில் குறைவான கலோரியே உள்ளது. மேலும் வெள்ளரிக்காய் மிக குளிர்ச்சி தன்மை கொண்டது.

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளரிக்காயை எடுத்துக்கொண்டால் நன்கு செரிமானம் ஆகும். மேலும் வெள்ளரியில் உள்ள நீர் சத்து நாக்கில் உள்ள வறட்சியைப் போக்குவதுடன் பசியை தூண்டுவதற்காக உதவுகிறது.

அதுமட்டுமின்றி சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணை குணப்படுத்தவும் உதவுகிறது. வெள்ளரிக்காய் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.

வெள்ளரிக்காய் பித்தநீர், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்க உதவுகிறது.

100 கிராம் வெள்ளரிக்காயை எடுத்து கொள்ள வேண்டும. அதனுடன் இளநீரையும் கலந்து, ஒருமணிக்கு இரண்டு முறை அருந்த வேண்டும். வறண்ட தோல், காய்ந்து விட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் சீசனில் தினமும் வெள்ளரிக்காய்ச் சாறு சாப்பிட்டு வந்தால் வறட்சித் தன்மையை நீக்கும்.