Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கருமுட்டை நன்கு வளர்ச்சி அடைந்து குழந்தை பாக்கியம் கிடைக்க இதை மூன்று நாட்களுக்கு கண்டிப்பா சாப்பிடுங்க!!

#image_title

கருமுட்டை நன்கு வளர்ச்சி அடைந்து குழந்தை பாக்கியம் கிடைக்க இதை மூன்று நாட்களுக்கு கண்டிப்பா சாப்பிடுங்க!!

நாட்டிலுள்ள பெரும்பாலான பெண்களுக்கு தற்போது இருக்கும் பிரச்சனை தான் குழந்தை பாக்கியம் இல்லாதது. சில பேருக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருப்பதன் காரணமாக குழந்தை பிறக்க தாமதம் ஆகிறது. இந்த பிரச்சனையை சரி செய்வதற்கான மூலிகைகளைப் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

ஒரு கைப்பிடி அளவு இலந்தை இலையை எடுத்துக் கொள்ளவும். அதை நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் நான்கு பல்லு பூண்டு மற்றும் ஏழு மிளகு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.

இதை இளநீருடனும் அல்லது வீட்டில் உள்ள நீர் ஆகாரங்களுடன் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு இதை குடிப்பதால் உடம்பு சூடு தணிந்து கர்ப்பப்பை வளர்ச்சி அடையும். இதை மாதவிடாய் ஆன இரண்டாம் நாளில் காலையில் வெறும் வயிற்றில் 8 மணிக்குள் இதைக் குடித்து விட வேண்டும்.

இவ்வாறு ஐந்து நாட்கள் தொடர்ந்து இலந்தை இலைகளை பறித்து பூண்டு மிளகுடன் அரைத்து இளநீருடன் சேர்த்து குடிக்க வேண்டும். இந்த மாதவிடாய் பிரச்சனை இருக்கும் பெண்கள் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

ரொட்டி முதலிய ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. இயற்கையான உணவுகளான கேழ்வரகு கூழ், கலி போன்றவற்றை உண்டுவர கர்ப்பப்பைக்கு சக்தி கொடுக்கும். இவ்வாறு ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை தவிர்த்து இயற்கையான உணவுகளை உண்பதால் கர்ப்பப்பை வளர்ச்சி அடைந்து கருமுட்டை பலம் பெறும்.

நாட்டுக்கோழி முட்டை சாப்பிட்டு வர உடம்பிற்கு மிகவும் நல்லது. பச்சரிசி சாதங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு முக்கியமாக கூறும் அறிவுரை என்னவென்றால் பிராய்லர் கோழி சிக்கனை முற்றிலும் ஒதுக்க வேண்டும்.

கர்ப்பபை மற்றும் கருமுட்டை வளர்ச்சி இல்லாதவர்கள் ஒரு நாட்டுக்கோழி முட்டையுடன் விளக்கெண்ணெய் 50 கிராம், மற்றும் ஒரு வாழைப்பழம் மூன்றையும் சேர்த்து நன்றாக குழைத்து அதை மாதவிடாய் ஆன முதல் மூன்று நாட்களில் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர கர்ப்பப்பையில் உள்ள பிரச்சனைகள் தீரும்.

இவ்வாறு சில உணவுகளை தவிர்த்தும் இயற்கையான உணவுகளை நாம் எடுத்துக் கொள்வதால் கர்ப்பப்பையில் ஏற்பட்ட சிக்கல்கள் தீர்ந்து உடனடியாக அனைவருக்கும் குழந்தை வரம் கிடைக்கும்.

Exit mobile version