3 நாளில் அல்சர் பிரச்சனை நீங்க அவலுடன் இதை சேர்த்து சாப்பிடுங்கள்!! இனி வயிற்றுப்புண் பிரச்சனையே இருக்காது!!
இன்றைய கால மோசமான வாழ்க்கைமுறை மற்றும் உணவுமுறை பழக்கத்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகளில் ஓன்று வயிற்றுப்புண்(அல்சர்).இவை மிகவும் ஆபத்தான பாதிப்பு.
அல்சர் வருவதற்கான காரணங்கள்:
1)நேரம் கடந்து உணவு உண்ணுதல்
2)உணவை தவிர்த்தல்
3)முறையற்ற தூக்கம்
4)மன அழுத்தம்
5)ஊட்டச்சத்து குறைபாடு
6)மது மற்றும் புகைப்பழக்கம்
காலை,மதியம்,இரவு நேர உணவுகளை உரிய நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.ஆனால் வேலைப்பளு காரணமாக உணவு உட்கொள்ள நேரமின்றி அதை தவிர்க்கும் நிலை ஏற்படுகிறது.இதனால் வயிற்றுப்பகுதில் புண்கள்,வலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இவை பெரும்பாலும் உணவுக் குழாய்,சிறுகுடல் மற்றும் வயிற்றுப்பகுதியில் தான் ஏற்படுகிறது.
அல்சர் அறிகுறிகள்:
1)கடுமையான வயிற்றுவலி
2)வயிறு எரிச்சல்
3)இரத்த வாந்தி
4)மலம் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு
5)கருமை நிற மலம் வெளியேறுதல்
6)குமட்டல்
7)உடல் எடை குறைவு
8)பசியின்மை
அல்சரை குணமாக்கும் வீட்டு வைத்தியங்கள்:
*தயிர்
*பெருங்காயம்
ஒரு கப் கெட்டி தயிரில் 1/4 தேக்கரண்டி பெருங்காயத் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அல்சர் புண்கள் ஆறும்.
*குளிர்ந்த பால்
ஒரு கிளாஸ் குளிர்ந்த பால் அருந்துதால் அல்சர் பாதிப்பு குணமாகும்.
*பசுநெய் + மஞ்சள்
ஒரு ஸ்பூன் பசுநெய்யில் 1/4 ஸ்பூன் மஞ்சள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.
*தேன்
தினமும் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் அல்சர் பாதிப்பு குணமாகும்.
*அவல் + பெருஞ்சீரகம்
ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு ஸ்பூன் அவல் பொடி மற்றும் ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகப் பொடி சேர்த்து கலக்கி அருந்தி வந்தால் வயிற்றுப்புண் ஆறும்.
*முட்டை
தினமும் ஒரு வேக வைத்த முட்டை சாப்பிட்டு வந்தால் அல்சர் பாதிப்பு குணமாகும்.