1 ஸ்பூன் வெந்தயத்தை இப்படி சாப்பிட்டால் சர்க்கரை நோய் முதல் பக்கவாதம் வரை அனைத்தும் குணமாகும்!!

0
186
Eating 1 spoon of fenugreek cures everything from diabetes to stroke!!

சமையலுக்கு பயன்படுத்தும் வெந்தய விதையில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது.பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி,நீரிழிவு நோயை குணமாக்கும் ஆற்றல் வெந்தயத்தில் இருக்கின்றது.

வெந்தயத்தில் அடங்கி இருக்கும் சத்துக்கள்:

*பாஸ்பரஸ்
*இரும்பு
*கால்சியம்
*ஆன்டி-ஆக்ஸிடன்ட்

வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து அந்நீரை குடித்து வந்தால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும்.இரவில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை நீரில் போட்டு ஊறவைத்து காலையில் அதை வடிகட்டி குடிக்க வேண்டும்.

வெந்தயம் ஊற வைத்த நீரை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்:

1)செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் வெந்தயம் ஊறவைத்த நீரை குடித்து பலன் பெறலாம்.வெந்தயத்தில் இருக்கின்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் செரிமானத்திற்கு உதவுகிறது.அது மட்டுமின்றி வாயுத் தொல்லை,வயிறு வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாக உதவுகிறது.

2)இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.

3)உடலில் தேங்கி கிடக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடலை பிட்டாக வைத்துக் கொள்ள உதவுகிறது.வெந்தயத்தில் இருக்கின்ற பிளவனாய்டுகள் கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.

4)வெந்தயம் ஊறவைத்த நீரை குடிப்பதால் மாதவிடாய் வயிற்று வலி,வயிறு பிடிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.

5)எடை இழப்பு மேற்கொள்ள விரும்புவோர் வெந்தயம் ஊறவைத்த நீரை அருந்தி வரலாம்.

6)தலை முடியின் ஆரோக்கியத்திற்கு வெந்தயம் ஊற வைத்த நீர் பெரிதும் உதவுகிறது.

7)கருப்பை நீர்கட்டியை கரைக்க வெந்தயம் ஊற வைத்த நீரை அருந்தி வரலாம்.

8)உடல் உஷ்ணம் இருப்பவர்கள் தினமும் ஒரு கிளாஸ் ஊறவைத்த வெந்தய நீரை அருந்தலாம்.