Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

’பிளாஸ்டிக் டப்பாவில் சாப்பிட்டால் இதய நோய் உங்களை தாக்கும்’..!! ஆய்வு முடிவில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பிளாஸ்டிக் டப்பாக்களில் வாங்கப்படும் உணவுகளை சாப்பிடுவதால், இதயத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்ததுள்ளது.

நெகிழி என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தினசரி நம் வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறோம். பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று கோஷம் போடுவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது 100% வெற்றியை தருகிறதா என்பது கேள்விக்குறிதான். நாம் தினமும் பயன்படுத்தும் பேனா முதல் வானில் பறக்கும் விமானம் வரை  அனைத்திலும் பிளாஸ்டிக்கின் ஆதிக்கம் இருக்கிறது. பிளாஸ்டிக் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருளாகும்.

பிளாஸ்டிக் ஆனது நிலத்தில் மக்காது, நிலத்தடியில் உள்ள நீரின் அளவை பாதிக்கும். பிளாஸ்டிக்கை எரிப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இவையெல்லாம் அனைவரும் அறிந்ததுதான். அதேபோல் சூடான டீ, காஃபி, பால், சாதம், சாம்பார் ஆகியவற்றை பிளாஸ்டிக் டப்பாவோ அல்லது பிளாஸ்டிக் கவர்களிலோ சேமித்து வைக்கும்போது, அதிலிருக்கும் நச்சுப் பொருள்கள் உணவில் ஊடுருவும்.

இந்நிலையில் தான், பிளாஸ்டிக் டப்பாக்களில் வாங்கப்படும் உணவுகளை சாப்பிடுவதால், இதயத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்ததுள்ளது. பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் இதயத்தை நேரடியாக தாக்குகின்றன. இது இதய நோய் ஏற்பட வழிவகுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் 3,000 பேருக்கு பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் உணவுகள் வழங்கப்பட்டு ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். அதன்படி, பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் 20,000-க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் உள்ளதாகவும், அதில், சூடான உணவுப் பொருட்கள் வைக்கப்படுவதால், அதில் உள்ள ரசாயனங்கள் உணவில் கலந்துவிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

 

 

Exit mobile version