Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேனில் ஊறவைத்த இஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!!

#image_title

தேனில் ஊறவைத்த இஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!!

நம் உணவில் இஞ்சியின் பயன்பாடு அதிகளவில் உள்ளது.இந்த இஞ்சி அதிக நறுமணத்துடன் இருப்பதினால் உணவில் சேர்க்கப்படும் பொழுது அவை மிகவும் சுவையாக இருக்கிறது. இஞ்சியில் தேநீர், துவையல், ஊறுகாய், பச்சடி, தொக்கு என்று பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது.

இஞ்சியில் அதிகளவு பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, பி6, நியாசின், போல்ட் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது. அதேபோல் புரதங்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துகளும் நிறைந்து இருப்பதினால் இவை நம் உடலுக்கு பல வித நன்மைகளை வாரி வழங்கக் கூடியவையாக இருக்கிறது. இந்த இஞ்சியை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைக்கும்.

தேனில் ஊறவைத்த இஞ்சி – தயார் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*இஞ்சி – 1 கப்(சிறு சிறு துண்டுகளாக நறுக்கியது)

*தூயத் தேன் – தேவையான அளவு

*கண்ணாடி பாத்திரம் – 1

செய்முறை:-

முதலில் ஒரு பெரிய இஞ்சி எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும். பின்னர் அதை ஒரு காட்டன் துணி கொண்டு துடித்துக் கொள்ளவும். தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டாம். அடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பின்னர் ஒரு ஈரம் இல்லாத கண்ணாடி ஜார் எடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள இஞ்சியை கீறல் போட்டு சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதில் இஞ்சி மூழ்கும் அளவிற்கு தேன் சேர்த்து கொள்ளவும். இதை மூடி போட்டு இரண்டு அல்லது 3 நாட்கள் வரை ஊற விட்டு பின்னர் சாப்பிடலாம்.

தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-

*தேனில் ஊறவைத்த இஞ்சியை சாப்பிட்டு வந்தோம் என்றால் பித்தம், தலைசுற்றல் செரிமான பிரச்சனை நீங்கும். செரிமான பாதிப்பு நீங்க தேனில் கலந்த இஞ்சியை சாப்பிடுவது நல்லது.

*உடல் வலுப்பெற தேனில் ஊறவைத்த இஞ்சியை சாப்பிடுவது நல்லது.

*சரும சுருக்கத்தை சரி செய்து இளமை பொலிவுடன் வைத்துக் கொள்ள தேனில் கலந்த இஞ்சி பெரிதும் உதவுகிறது.

*சளி, இருமல், தொண்டை வலி இருப்பவர்கள் தினமும் தேனில் ஊறவைத்த இஞ்சியை சாப்பிடுவதன் மூலம் உரியப் பலன் கிடைக்கும்.

*உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க தினமும் தேனில் ஊறவைத்த இஞ்சியை சாப்பிடுவது நல்லது.

*நம்மில் பலர் உடல் பருமனால் அவதிப்பட்டு வருகிறோம். இதை குறைக்க முடியாமல் திணறி கொண்டிருப்பவர்களுக்கு தேனில் ஊறவைத்த இஞ்சி சிறந்த தீர்வாக இருக்கும்.

*உரிய நேரத்தில் தூக்கம் இல்லை என்றால் நோய் பாதிப்புக்கு ஆளாக நேரிடும். எனவே கவலையை மறந்து நிம்மதியாக தூங்க தினமும் தேனில் ஊறவைத்த இஞ்சியை சாப்பிடுவது நல்லது.

*உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரித்து இரத்தம் சம்மந்தபட்ட நோய் பாதிப்பு வராமல் இருக்க இந்த இஞ்சி பெரிதும் உதவியாக இருக்கிறது.

Exit mobile version