Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த பிஸ்கட் சாப்பிட்டால் குடலில் ஓட்டை விழும்.. உயிர் போகும்!! எச்சரிக்கும் நிபுணர்கள்!!

சமீப காலமாக வித்தியாசமான உணவுகளுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகமாக கிடைக்கிறது.தற்பொழுது மக்களை கவரும் எந்த உணவும் ஆரோக்கியமானதாக இல்லை.வித்தியாசமான உணவுகளை கண்டுபிடித்து சாப்பிடுவதால் தான் உடலில் புது நோய்கள் என்ட்ரி கொடுக்கிறது.

நாம் காலையில் குடிக்கும் டீ முதல் இரவு சாப்பிடும் சப்பாத்தி வரை அனைத்தும் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பவையாகவே இருக்கிறது.குறிப்பாக குழந்தைகள் சாப்பிடும் பெரும்பாலான பொருட்கள் கேடு விளைவிக்க கூடியவையாக இருக்கிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கடந்த சில வருடங்களாக ஸ்மோக் பிஸ்கட் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது.இந்த ஸ்மோக் பிஸ்கட்டை சாப்பிடும் பொழுது வாய்,மூக்கு போன்றவற்றில் புகை வரும்.இந்த அனுபவத்தை பெற குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் ஆசையாக வாங்கி சாப்பிடுகின்றனர்.ஆனால் ஸ்மோக் பிஸ்கட் மிகவும் ஆபத்தான பொருள் என்பதை அறியாமல் வாங்கி சாப்பிடுகின்றனர்.

நார்மல் பிஸ்கட்டில் திரவ நைட்ரஜன் சேர்த்து ஸ்மோக் பிஸ்கட்டாக விற்பனை செய்யப்படுகிறது.இந்த திரவ நைட்ரஜன் பிஸ்கட்டை சாப்பிட்டால் வாய்,மூக்கில் புகை வரும்.

இருநூறு டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை கொண்ட திரவ நைட்ரஜன் பிஸ்கட்டில் சேர்க்கப்படுகிறது.இந்த ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்டால் குடலில் ஓட்டை விழுந்து விடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.திரவ நைட்ரஜன் குளிர்ச்சி நிறைந்தவையாகும்.இவை எந்த பொருளையும் நொடியில் உறைய வைத்துவிடும்.இந்த திரவ நைட்ரஜன் நமது உடலுக்குள் சென்றால் திசுக்கள் உறைந்துவிடும்.

திரவ நைட்ரஜன் உடலில் நேரடியாக செல்வதால் வயிற்று வலி,சுவாசப் பிரச்சனை,குடல் துளை விழுதல் போன்ற உயிருக்கு ஆபத்தான பாதிப்புகள் ஏற்படும்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வயிறு வலி,குடலில் துளை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது என்ற செய்தி வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.எனவே இதுபோன்ற ஆபத்து நிறைந்த பொருட்களை குழந்தைகள்,பெரியவர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Exit mobile version