மன அழுத்தம் என்பது தற்பொழுது அனைவரையும் அச்சுறுத்தி வரும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.அதிகப்படியான மன அழுத்தம் உடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்து வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் ஒரு பெரிய நோயாகும்.
மன அழுத்தம் ஏற்பட காரணங்கள்:
1)வேலைப்பளு
2)தூக்கமின்மை
3)உடல் நலக் கோளாறு
4)குடும்பப் பிரச்சனை
உரிய நேரத்தில் மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெறவில்லை என்றால் அவை மன ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கச் செய்யும் விஷயமாக மாறிவிடும்.நீண்ட நாட்களாக மன அழுத்தப் பிரச்சனை இருப்பவர்களுக்கு அவர்களின் மனம் மட்டுமின்றி உடல் ஆரோக்கியமும் கடுமையாக பாதிக்கத் தொடங்கும்.
நீடித்த மன அழுத்தத்தின் விளைவாக சுவாசப் பிரச்சனை,சீரற்ற இதயத் துடிப்பு,வளர்ச்சிதை மாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.இந்த மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள சில ஆரோக்கிய பழங்களை சாப்பிடலாம்.பழங்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு உடலை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
மன அழுத்தத்தை குறைக்கும் பழங்கள்:-
சிட்ரஸ் பழங்கள்
வைட்டமின் சி சத்து அதிகளவு நிறைந்து காணப்படும் எலுமிச்சை,ஆரஞ்சு,சாத்துக்குடி போன்ற பழங்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.சிட்ரஸ் பழங்களை தவிர மேலும் சில வகை பழங்கள் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கொய்யா
இந்த பழத்திலும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மன ஆரோக்கியம் மேம்படும்.
திராட்சை
இரும்பு,பொட்டாசியம்,சோடியம் உள்ளிட்ட சத்துக்களை கொண்டுள்ள திராட்சையை சாறாக பருகி வந்தால் மன அழுத்தம் குறையும்.
வாழைப்பழம்
பாஸ்பரஸ்,பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மன ஆரோக்கியம் மேம்படும்.வாழைப் பழத் தோலில் டீ செய்து பருகி வந்தால் மன அழுத்தம் குறையும்.