தோற்றத்தில் பிஞ்சி வெள்ளரி போன்று இருக்கும் கோவைக்காய் சர்க்கரை நோயை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது.கொடி வகையை சேர்ந்த கோவைக்காய் கசப்பு சுவை கொண்ட காய்கறி என்பதால் பலரும் அதை ஒதுக்கி வைக்கின்றனர்.
உண்மையில் கோவைக்கு நிகரான சத்து வேறு எந்த காய்களிலும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.கோவைக்காயில் நார்ச்சத்து,வைட்டமின் ஏ,வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது.
கோவைக்காயை ஜூஸாக தயாரித்து குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.நீரிழிவு நோயாளிகள் கோவைக்காய் ஜூஸ் செய்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.கோவைக்காயில் இருக்கின்ற குறைவான கலோரி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
நார்ச்சத்து நிறைந்த கோவைக்காய் செரிமானப் பிரச்சனையை சரி செய்கிறது.கோவைக்காயில் இருக்கின்ற பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.தினமும் கோவைக்காய் ஜூஸ் பருகி வருபவர்களுக்கு இருதய நோய் அபாயம் ஏற்படாமல் இருக்கும்.
ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி சத்து நிறைந்த கோவைக்காயை அடிக்கடி உணவாக சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.சிறுநீரக கல்லை கரைக்க கோவைக்காய் சாறு பருகலாம்.
சிறுநீர் பாதையில் உருவாகிய தொற்றுக் கிருமிகளை அழிக்க கோவைக்காய் ஜூஸ் செய்து குடிக்கலாம்.தொப்பை கொழுப்பை கரைக்க கோவைக்காய் சாப்பிடலாம்.பல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாக கோவைக்காய் சாப்பிடலாம்.கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு அருமருந்தாக கோவைக்காய் திகழ்கிறது.
அல்சர் புண்களை குணமாக்கி கொள்ள கோவைக்காய் சாறை வெறும் வயிற்றில் பருக வேண்டும்.வாய்ப்புண்,வயிற்றுப்புண் பாதிப்பு குணமாக கோவைக்காய் சாப்பிடலாம்.கோவைக்காய் இலையை நெயில் வதக்கி குழைத்து சருமத்தில் பூசினால் சொறி சிரங்கு,தேமல் போன்ற தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.
உடல் சூடு குறைய கோவைக்காய் வற்றலை தயிரில் கலந்து சாப்பிடலாம்.தீப்புண்கள் மீது கோவை இலை சாறு தடவினால் சீக்கிரம் குணமாகும்.