Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சுரக்காய் சாப்பிட்டால் இத்தனை நோய்கள் குணமாகுமா? முழு விவரம் இதோ!

#image_title

சுரக்காய் சாப்பிட்டால் இத்தனை நோய்கள் குணமாகுமா? முழு விவரம் இதோ!

நம் உடலில் நீர் சத்து குறைவதால் பெரும்பாலானோருக்கு பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அவ்வாறான பிரச்சனைகளை சரி செய்வதில் சுரைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் சுரைக்காய் உண்பதன் மூலம் என்ன பலன் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சுரைக்காய் பொதுவாக நீர் தன்மை கொண்டது.சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள சூடு குறையும், உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.மேலும் சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்தாக உள்ளது.

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து வந்தால் பித்தம் சமநிலையாகவே காணப்படும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் வழங்கி, உடலை வலுப்படுத்தும்.பெண்களுக்கு உண்டாகும் ரத்த சோகையைப் போக்கும் மற்றும் இரத்தத்தைச் சுத்தம் செய்வதிலும் முதன்மையாக உள்ளது.

மேலும் நம் உடலில் உள்ள குடல் புண்ணை குணப்படுத்த உதவுகிறது.மூலநோய் உள்ளவர்கள் சுரைக்காய் எடுத்துக் கொண்டால் நோய் குணமாகும்.

சுரைக்காயில் உள்ள சதையை வெட்டி உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும். சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் குணமாகும்.

சுரையின் இலைகளை நீர் சேர்த்து ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு குணமாகும். மேலும் காமாலை உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்தாக உள்ளது. அதனால் தினமும் சுரக்காயை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நம் உடலில் உள்ள பல்வேறு விதமான நோய்கள் குணமாகும்.

Exit mobile version