Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீரா மிதுன் கைது நடவடிக்கையின் எதிரொலி! அவரின் ஆண் நண்பரும் கைது!

Echo of Meera Mithun's arrest! Her boyfriend also arrested!

Echo of Meera Mithun's arrest! Her boyfriend also arrested!

மீரா மிதுன் கைது நடவடிக்கையின் எதிரொலி! அவரின் ஆண் நண்பரும் கைது!

நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சில தவறான கருத்துக்கள் மற்றும் சில தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள் மற்றும் சில குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை பற்றிய அவதூறு கருத்தினால் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். அந்த பதிவின் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

அந்த புகாரை பதிவு செய்த போலீஸார் மீராமிதுன் மீது 7 சட்டப்பிரிவுகளின் கீழ் சைபர் க்ரைம் போலீசார் சார்பில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரை போலீசார் தேடிய நிலையில், கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள நட்சத்திர விடுதியில் அவர் தனது ஆண் நண்பருடன் தங்கியிருந்தது, குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் அவர்கள் நட்சத்திர விடுதிக்கு சென்று அந்த நடிகையை போராடி  கைது செய்துள்ளனர்.

இதையடுத்து அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்ய முயன்றபோது, தன்னை போலீசார் கொடுமைப் படுத்துவதாக கூறி அவர் ஒரு வீடியோவை எடுத்து, அவசர அவசரமாக அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றமும் செய்தார். அதன் பிறகு போலீசார் அவரது செல்போனை பறிமுதல் செய்தனர். ஆனாலும் தொடர்ந்து நடிகை வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீஸ் வாகனத்தில் ஏறவும் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பெரும் போராட்டத்திற்கு பிறகு அவரை சென்னை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் போலிஸார் தெரிவித்துள்ளனர். அவரை கைது செய்த போலிசார் அவரது ஆண் நண்பர் அபிஷேக்கையும் போலீசாரின் வாகனத்திலேயே அழைத்து வந்தனர். காவல் ஆணையர் அலுவலகம் அழைத்து வரப்பட்ட மீராமிதுன் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் உள்ளே செல்லும் போது அங்கிருந்த கேமராவில் பதிவாகும் படி எனக்கு இருபத்தி நான்கு மணி நேரமாக உணவு வழங்க வில்லை என்றும், என் கையை உடைத்து விட்டார்கள் என்றும், நான் மூன்று வருடங்களாக புகார் தந்தேன். அதை எல்லாம் எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாத போலீசார் இப்போது மட்டும் என்னை கைது செய்துள்ளனர் என தொடர்ந்து பேசிக் கொண்டே சென்றார். மேலும் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் அவருக்கு உடந்தையாக இருந்த அவருடைய ஆண் நண்பர் அபிஷேக்கையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது கைது செய்துள்ளனர் என தெரிவித்தனர்.

Exit mobile version