புதிய வகை நோய் தொற்று பாதிப்பு¡ சென்னையில் 2வது நாளாக அதிரடி ஆய்வு!

0
98

புதிய வகை நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில, அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக புதிய வகை நோய்த்தொற்று அதிகமாக இருக்கக்கூடிய மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய குழுவினர் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் புதிய வகை நோய் தொற்று பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மருத்துவர் வினிதா, மருத்துவர் பர்பசா, மருத்துவர் எஸ் சந்தோஷ்குமார், மருத்துவர் தினேஷ்பாபு, உள்ளிட்ட 4 பேர் கொண்ட மத்திய குழு சென்ற 26-ஆம் தேதி இரவு சென்னை வந்து சேர்ந்தது.

முதல் நாளான நேற்று முன்தினம் சென்னை விமான நிலையம், கிண்டி கிங்ஸ் மருத்துவமனை, உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த மத்திய குழுவை சார்ந்தவர்கள் அதனையடுத்து தேனாம்பேட்டையில் இருக்கின்ற டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது.

அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் புதிய வகை நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற நடவடிக்கைகள், சிகிச்சைகள், ஆக்சிஜன் வசதி, தடுப்பூசியின் இருப்பு மற்றும் மருத்துவ கட்டமைப்பு தொடர்பாக மருத்துவ குழுவினர் கேட்டறிந்து இருக்கிறார்கள்.

அதாவது டிஎம்எஸ் வளாகத்தில் 4 கோடியில் அமைக்கப்பட்டிருக்கின்ற ஆய்வகத்தில் புதிய வகை நோய் தொற்று பரிசோதனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும் செங்கல்பட்டு மற்றும் குன்னூரில் இருக்கின்ற தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி உற்பத்தியை ஆரம்பிக்க வேண்டும் எனவும், மத்திய குழுவை சேர்ந்தவர்களிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இந்த சூழ்நிலையில் இரண்டாவது நாளான நேற்றைய தினம் வளசரவாக்கம், கற்பகாம்பாள் நகர் பகுதிகளுக்கு சென்று தமிழ்நாட்டில் முதலாவதாக புதிய வகை நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நைஜீரியாவில் இருந்து வந்தவரின் வீடு மற்றும் அருகில் இருக்கின்ற பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தார்கள்.

அதன் பிறகு மாலை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்கள் அங்கே அவர் மூன்று கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற நோய் தொற்று சிகிச்சை வார்டுகளை பார்வையிட மத்திய குழுவை சார்ந்தவர்கள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை ,ஆக்சிஜன் படுக்கைகள், மருந்துகள், மருத்துவ கட்டமைப்பு தொடர்பாக மருத்துவமனை தலைமை பொறுப்பாளரிடம் கேட்டதோடு இரண்டாவது அலையின் போது நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை, அதனை கையாண்ட விதம் தொடர்பாகவும், கேட்டார்கள். மேலும் தற்சமயம் ஏற்பட்டிருக்கின்ற புதிய வகை நோய் தொற்று பாதிப்பை கையாளும் விதம் தொடர்பாகவும், மருத்துவமனை தலைமை பொறுப்பாளரிடம் கேட்டறிந்தார்கள்.

இதனை தொடர்ந்து மூன்றாவது நாளான இன்றைய தினம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்ய மத்திய குழுவை சார்ந்தவர்கள் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது, அதனை அடுத்து ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் மத்திய குழுவினர் சமர்ப்பிக்க இருக்கிறார்கள்.