Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலி! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலி! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

கொரோனா தொற்றானது குறைந்து வந்த நிலையில் அதன் உருமாற்று வைரஸான ஒமிக்ரான் தற்போது  நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் இதுவரை ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400ஐ கடந்தது. கடந்த சில தினங்களில்  தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 34பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் அதிகபட்சமாக  சென்னையில் மட்டும் இதுவரை 26பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றப்படவேண்டிய பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 18 வயதிற்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கட்டாயம் கோவிட் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் மாணவர்கள் சமூக இடைவெளி மற்றும் முககக்கவசம் அணிகிறார்களா என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், கல்லூரிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்கவும் விடுதிகளில் சாப்பிடும்போது ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் வாழை மட்டையால் ஆன தட்டுகளை வழங்க வேண்டும் என்றும் வகுப்பறைகளில் குளிர்சாதன கருவிகளை பயன்படுத்தக் கூடாது என்றும் மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலன் தொடர்ந்து பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version