போராட்டம் எதிரொலி ;நடக்கவிருந்த ரயில்வே தேர்வுகள் ஒத்திவைப்பு !

0
109

ரயில்வே துறையில், நிலை 1 மற்றும் தொழில் நுட்பம் சாராத பல்வேறு வகை பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு தேர்வு நடைபெற்றது. 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தப் பணியிடங்களுக்கான தேர்வுகளை பல்லாயிரக்கணக்கானோர் எழுதினர். ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த 14ம் மற்றும் 15ம் தேதிகளில் வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வு அடுத்த மாதம் 15 மற்றும் 23ம் தேதிகளில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இது, தேர்வர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.முதல்நிலை தேர்வு எழுதியவர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களை ஏமாற்றுவதற்கு சமம் எனவும், குறைந்த கல்வி தகுதி கொண்ட பணியிடங்களுக்கு கூட அதிக கல்வித்தகுதி கொண்டவர்களை தேர்வு செய்யும் முயற்சி எனவும் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக கூறி பீகார் மாநிலம் முழுவதும் தேர்வர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ரயில் பெட்டிக்கு தீவைப்பு உள்பட ரயில்வே சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், இரண்டாம் கட்ட தேர்வுகளை நிறுத்திவைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 15 மற்றும் 23-ஆம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகின்றன.