கோபத்தில் இருக்கிறாரா எடப்பாடி பழனிச்சாமி?

0
118

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது அதிமுக மட்டுமே 66 இடங்களில் என்று இருக்கிறது.

தேர்தல் முடிவு தொடர்பாக ஓபிஎஸ் இபிஎஸ் உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில். மக்களின் தீர்ப்பை மனதார ஏற்கிறோம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 29ஆம் தேதி சென்னையில் இருந்து சேலம் சென்ற எடப்பாடி பழனிச்சாமி அவர் சேலம் சென்றதில் இருந்து இன்று வரையில் யாரையுமே சந்திக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

தேர்தல் முடிவுகளைக் கூட தன்னுடைய வீட்டில் இருந்தபடியே பார்த்தவர் வேலுமணி மற்றும் தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்களுடன் தொலைபேசியில் உரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது. தொடக்கத்திலிருந்தே திமுக கூட்டணி முன்னணியில் இருந்தாலும் அதிமுகவிற்கு ஒரு கவுரவமான தொகுதிகள் கிடைத்தததால் அவர் நிம்மதியடைந்ததாக சொல்கிறார்கள்.

அதோடு எடப்பாடி சட்டசபை தொகுதியில் எடப்பாடி பழனிசாமி ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 வாக்குகளை பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பத்குமார் 93 ஆயிரத்து 802 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்..மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தாலும் கூட சான்றிதழை பெற மைய்யத்திற்கு வரவில்லை.ஆகவே அவர் கோபத்தில் இருக்கிறாரா அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறாரா என்ற கேள்வி எழ தொடங்கி இருக்கிறது.