Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எடப்பாடியாரே காத்திருங்கள்! உங்களுக்காக ஜெயில் தயாராக உள்ளது ஸ்டாலின்!

தமிழகத்திலே விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருவரையொருவர் மிஞ்சும் அளவிற்கு தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், அதுபோல எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களும், தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர் தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் இடங்கள் எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களை கடுமையாக குற்றம் சாட்டி வருகிறார். அதோடு தங்கள் கட்சி செய்த திட்டங்கள் செயல்கள் என்று எல்லாவற்றையும் பொதுமக்களுக்கு ஞாபகப்படுத்தி வருகிறார்.

அதேபோல தமிழக எதிர்கட்சியான திமுக அதிமுக கொண்டுவந்த திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுப்பதற்காக என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டது, எப்படியெல்லாம் குறை கூறியது என்பதையும் மக்களிடையே எடுத்துக் கூறி வருகின்றார். அதேபோல திமுக செய்த அராஜகங்களை கடந்த திமுக ஆட்சி காலங்களில் திமுக தமிழகம் முழுவதிலும் செய்த ஊழல்கள் போன்றவற்றை தமிழக மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.


இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை நேற்றைய தினம் திருவாரூர் மாவட்டத்தில் இருந்த ஆரம்பித்தார். நேற்று கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்து அதன்பிறகு சென்னையிலிருந்து திருவாரூர் கிளம்பினார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

இந்த திருவாரூருக்கு தெருவுக்குத் தெரு ஒரு பெருமை இருப்பதாக சொல்லப்படுகிறது .இந்த திருவாரூரில் தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது இந்திய அளவிலும் பல முக்கிய தலைவர்கள் இங்கே வந்து பிரச்சாரம் மேற்கொண்டு மேடைகளில் பேசியும் இருக்கிறார்கள். அவற்றையெல்லாம் நினைவுகூர்ந்த ஸ்டாலின் கடைசியாக கடந்த 2016ஆம் ஆண்டு திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி கடைசியாக இங்கே வந்து உரையாற்றி விட்டு சென்றதையும் நினைவுகூர்ந்தார்.

அதன் பிறகு ஆளும் கட்சியை பற்றியும் அந்தக் கட்சி செய்திருக்கும் ஊழல்கள் பற்றியும் படித்த அவர் தற்போது அதிமுக வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை தொடர்பாகவும் பேசத்தொடங்கினார் .அதிமுகவின் தேர்தல் அறிக்கை என்பது திமுக தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடித்து உருவாக்கப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார். அதோடு தற்சமயம் அது அதிமுகவின் தேர்தல் அறிக்கை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் சிறிது காலம் போனால் இது திமுகவின் தேர்தல் அறிக்கை என்று மாற்றி எழுதினாலும் எழுதி விடுவார்கள் என்று நகைச்சுவையாக பேசியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

நான் அறிவாலயத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை கண்காணிப்பதற்காக இங்கே தனி உளவாளியை அனுப்பி வைத்திருக்கிறாரோ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்ற சந்தேகமும் எழுகிறது என்று அவர் தெரிவித்திருக்கிறார். அவருக்கு காரணம் நான் இங்கே என்ன சொல்கிறானோ அதனை உடனடியாக சட்டசபையில் நிறைவேற்றுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்று தெரிவித்திருக்கிறார்.

இப்பொழுது அடுக்கடுக்காக அறிவிப்புகளை வெளியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நான்காண்டு கால ஆட்சியில் இருந்த சமயத்தில் என்ன செய்து கொண்டிருந்தார் என்ற கேள்வியும் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் எழுப்பியிருக்கிறார்.

அதோடு விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் அந்த சமயத்தில் இதுவரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்த ஊழல்கள் அனைத்தும் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டு அதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version