Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல்வரை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் திமுக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் பகுதிக்கு வருகை தந்த திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி பகுதியில் இருக்கக்கூடிய 40 அடி உயரம் இருக்கின்ற கொடிக்கம்பத்தில் திமுகவின் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார்.

அந்த சமயத்தில், உரையாற்றிய அவர் தமிழ்நாட்டிலேயே திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது அதேபோல சட்டசபைத் தேர்தலிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று அந்த தொகுதியின் மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

மத்திய பாஜகவின் ஆட்சியில் பெட்ரோல் , டீசல் ,அரிசி, சர்க்கரை கோதுமை ஒரு அரிசியை பொருட்களின் விலை வெகுவாக உயர்ந்து இருக்கிறது என்று தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய 15 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வரி பணத்தையும் இதுவரையில் கொடுக்கவில்லை, அதேபோல மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிவாரண தொகையையும் இதுவரையில் மத்திய அரசு கொடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ஜெயலலிதா கடைசி வரையில் அனுமதிக்கவில்லை. ஆனால் நரேந்திர மோடி தெரிவித்ததால் தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு அனுமதி கொடுத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவருடைய இந்த அணுகுமுறை காரணமாக, சென்ற மூன்று ஆண்டுகளில் 14 தற்கொலை நடந்திருக்கிறது திமுக ஆட்சிக்கு வந்தவுடனேயே முதல் வேலையாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின்.

அதேபோல தொழில்துறையில் தமிழகம் முதலிடத்தில் இருந்து வந்தது. ஆனால் அதிமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து தற்போது வரை இந்தியாவில் தொழில் துறையில் தமிழகம் 14 ஆவது இடத்திற்கு சென்று விட்டது என்று வருத்தம் தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின்.

Exit mobile version