Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாஜகவை திக்குமுக்காட வைத்த எடப்பாடி பழனிச்சாமி!

கடந்த இரு தினங்களாக அதிமுக தலைமை தொடர்ந்து பாஜகவிற்கு செக் வைக்கும் முறையில் பேசி வருவது அதிமுகவின் தொண்டர்களை உற்சாகம் அடைய வைத்திருக்கிறது.

சென்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக விற்கு ஐந்து தொகுதிகளை கொடுத்தது. அதிமுக தமிழ்நாட்டில் இரண்டு சதவீத வாக்கு வங்கி கூட இல்லாத கட்சி பாரதிய ஜனதா. ஆனாலும் அந்த கட்சிக்கு தேமுதிகவிற்கு ஒதுக்கிவிடவும், ஒரு தொகுதி அதிகமாக கொடுத்தது அதிமுக. இதற்கு காரணம், மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருப்பதால் தான் தமிழ்நாட்டில் அதிமுக அரசு சிக்கலின்றி ஐந்து வருடங்களை நிறைவு செய்வதற்கு மத்திய அரசின் தயவால் அது எடப்பாடி பழனிச்சாமிக்கு தேவைப்பட்டது. இதன் காரணமாகத்தான் நாடாளுமன்றத் தேர்தலில் அந்த கட்சிக்கு 5 இடங்களை அதிமுக வழங்கியது.

ஆனாலும், பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தோல்வியை சந்தித்தது. இதன் பிறகும் கூட பாஜக கூட்டணியை முறித்துக் கொள்வதற்கு அதிமுக தயாராக இல்லை. அதற்கு காரணம் மத்தியில் பாஜக தான் ஆட்சியில் இருந்தது தமிழ்நாட்டில் இந்த அரசானது சிக்கலில்லாமல் தொடர்வதற்கு மத்திய அரசின் கருணை தேவை என்பதால் தான் கூட்டணி விவகாரத்தில் கூட உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அதிமுக பாஜக கூட்டணி எதிர்வரும் சட்டசபை தேர்தலிலும் தொடரும் என்று அறிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி .சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கு மத்திய அரசின் கருணை தேவை என்பதை எடப்பாடி பழனிச்சாமி உணர்ந்து இருக்கின்றார்.

தேர்தல் நேரத்தில் எல்லா அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்திடம் போய்விடும். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் பறக்கும் படை, என்று மத்திய அரசின் ஏஜென்சிகள் தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்று தெரிவித்து அவ்வபோது ரைடு நடத்தும் இதுபோன்ற விஷயங்களை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் பாஜகவுடன் கூட்டணி இருக்க வேண்டும். என்று எடப்பாடி பழனிச்சாமி நினைத்திருந்தார். ஆனாலும் பாஜகவின் கணக்கு வேறுமாதிரியாக இருக்கின்றது இந்த முறை சட்டசபை தேர்தலில் குறைந்தது ஐந்து இடங்களில் வென்று விட வேண்டும் என்பதுதான் அந்தக் கட்சியின் இலக்காக இருக்கின்றது.

Exit mobile version