தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு! பெரு மகிழ்ச்சியில் விவசாய பெருங்குடி மக்கள்

0
99

தமிழ்நாட்டிலேயே சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அந்த அளவிற்கு தமிழக அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் விறுவிறுப்பாக இருக்கின்றன.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அதேபோல தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களும் தங்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அதே போல தங்களுடைய கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

அதிமுகவைப் பொறுத்தவரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் முன்பிருந்தே தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கிவிட்டார். அந்த விதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கின்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பரப்புரை செய்தார்.

இந்தப் பிரச்சாரத்தில் முதல்வர் தெரிவித்ததாவது, அதிமுக அரசு சார்பாக பொது மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் நாங்கள் முழுமூச்சாக செயல்பட இருக்கிறோம் மக்களுடைய துன்பங்களை போக்கும் அரசு எங்களுடைய அரசுதான் தமிழக மக்கள் அனைவரும் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விராலிமலையில் இருக்கின்ற முருகன் கோவிலுக்கு செல்வதற்கு மலைப்பாதை சாலை தற்சமயம் அமைக்கப்பட்டிருக்கிறது. என்று தெரிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழக அரசு ஏழை மக்கள் அதிகமாக வசித்து வரும் 79பகுதிகளில் அம்மா மினி கிளினிக்கை ஏற்படுத்தி இருக்கின்றோம். என்று தெரிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதே சமயத்தில் ஒரே நேரத்தில் 2000 அம்மா மினி கிளினிக்கை நிறுவி இருக்கின்றோம் என்று தெரிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதோடு நம்முடைய அரசாங்கம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருக்கும் பயிர்க் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்திருக்கின்றோம் அதோடு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் விவசாயிகள் அனைவருக்கும் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படும் அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.