அதிமுக சார்பாக வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை! அதிர்ச்சிக்குள்ளான திமுக!

0
142

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கிவிட்டார். ஒவ்வொரு மாவட்டமாக சென்று அந்தந்த மாவட்டங்களில் நடைபெறக்கூடிய வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் போன்றவற்றை ஆய்வு செய்து வந்தார். அதோடு அந்தந்த மாவட்டங்களிலும் முதல்வருக்கான வரவேற்பு மிக பிரம்மாண்டமாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

அதேபோல நோய்தொற்று காலத்திலும்கூட தன்னைப் பற்றி கவலைப்படாமல் இப்படி தொடர்ச்சியாக மக்கள் பணியாற்றி வரும் முதல்வர் கிடைப்பது அரிது என்பது போன்ற பேச்சுக்களும் தமிழகம் முழுவதிலும் அடிபடத் தொடங்கியது. இதனைக்கண்ட எதிர்க்கட்சிகள் யாரும் இங்கேயும் செல்லக்கூடாது என்று ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து விட்டு இவர் மட்டும் தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறார் என்று விமர்சனம் செய்தனர்.

ஆனால் முதல்வருக்கு எதிராக எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் அவை அனைத்தையும் ஓரமாக வைத்துவிட்டு தன்னுடைய பணிகளை தொடர்ந்து செய்து வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.அதே போல தான் செல்லும் இடங்களில் அவரிடம் கொடுக்கப்படும் மனுக்களில் இருக்கும் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வந்தார். அந்த விதத்தில் தூத்துக்குடி மாவட்டத்திற்கான கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்ற முதல்வரிடம் வேலைவாய்ப்பு வேண்டும் என்று தெரிவித்து கோரிக்கை மனுவை கொடுத்த ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்தார்.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கின்ற 6 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட அதிமுக வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் பிரச்சாரத்தில் இறங்கினார். இந்த பிரசாரத்தின் இறுதிகட்டத்தில் கந்தர்வகோட்டை தனித்தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபாரதி அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது திமுக வேண்டுமென்றே அதிமுக அரசு மீது அவதூறான கருத்துக்களை தெரிவித்து வருகிறது. திமுக என்ற கட்சியில் இருந்துவரும் குடும்ப அரசியலை ஒழித்துக் கட்டுவதற்காக எதிர்வரும் தேர்தலில் அந்த கட்சிக்கு தகுந்த பாடத்தை ஓட்டங்கள் இது ஜனநாயக நாடு இங்கே யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம் கருணாநிதியின் குடும்பம் மட்டும் தான் ஆட்சிக்கு வரவேண்டும், தமிழகத்தை ஆள வேண்டும் என்பது கட்டாயமில்லை அதன்காரணமாக வாக்காளர்கள் எல்லோரும் அதிமுகவிற்கு வாக்களித்து திமுகவிற்கு தகுந்த பாடத்தை புகட்டுங்கள் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.