Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மக்களை ஏமாற்றும் முதல்வர்! கனிமொழி சரமாரி குற்றச்சாட்டு!

சுமார் பத்து வருட காலமாக ஆட்சியில் இருக்கின்ற அதிமுக தற்சமயம் எதற்காக குறைதீர்க்கும் மையம், இலவச தொலைபேசி எண், என்று எல்லாவற்றையும் அறிவிக்க வேண்டும் இதிலிருந்தே எடப்பாடிபழனிசாமி மக்களை ஏமாற்றுகிறார் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளலாம். என்று திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கோயம்புத்தூர், மற்றும் திருப்பூர், மாவட்டங்களில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அந்த சமயத்தில் அதிமுக ஆட்சி காரணமாக பொதுமக்களுக்கு எந்த ஒரு பயனும் ஏற்படவில்லை .தேர்தல் வரும் காரணத்தால் மட்டுமே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றி வருகின்றார் என்று தெரிவித்தார்.

குடிமராமத்து நாயகன் என முதல்வரை தெரிவிக்கிறார்கள். ஆனாலும் குளங்கள், ஏரிகள், நீர்நிலைகள், போன்றவை இன்னும் குடிமராமத்து பணி செய்யப்படாமலே கணக்கு மட்டுமே காட்டப்பட்டு இருக்கின்றன. அந்தப் பணம் எங்கே போயிற்று என இதுவரை யாருக்கும் தெரியவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

நீர் நிலைகள், குளங்கள், மற்றும் கால்வாய்கள், போன்றவற்றில் மழைபெய்த சமயத்தில் நீர் நிலைகளில் நீர் தேக்கம் அடையவில்லை வயல்களில் தான் நீர் தேங்கி நிற்கின்றது இதனை கிராம மக்கள் அனைவரும் தெரிவிக்கிறார்கள்.

திமுக மட்டுமே விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்து வருகிறது பத்தாண்டு காலமாக ஆட்சி இல்லாமல் இருந்தாலும் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அவனை சரிசெய்யும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருகிறது. விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற சட்டத்தில் உரிய திருத்தங்கள் வெளியிட வேண்டும் அப்படி இல்லை என்றால் அதனை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் கனிமொழி.

Exit mobile version