தொடர் ரெய்டு நடத்தும் திமுகவை சமாளிக்க எடப்பாடி போட்ட மாஸ்டர் பிளான்!  

0
196
Edappadi Palanisamy

தொடர் ரெய்டு நடத்தும் திமுகவை சமாளிக்க எடப்பாடி போட்ட மாஸ்டர் பிளான்!

 

அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை மற்றும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்படும் தொடர் ரெய்டு என பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்தார்.

 

இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சிவி சண்முகம் மற்றும் முன்னாள் அமைச்சர் SP வேலுமணி ஆகியோர் உடனிருந்தனர்.

 

இதனையடுத்து டெல்லியிலிருந்து திரும்பிய அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது டெல்லியில் அரசியல் எதுவும் பேசவில்லை.மக்களின் தேவையான நதி நீர் பிரச்சனை மற்றும் மேலும் சில பிரச்சனைகள் குறித்து மட்டுமே பேசியதாக கூறினார்.

 

ஆனால் டெல்லி பயணத்தில் அதிகமாக அரசியலே பேசப்பட்டது என தகவல்கள் கசிந்துள்ளளது. அந்த வகையில் அதிமுகவின் தற்போதைய பிரச்சனை மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது என்று கூறுகின்றனர்.

 

இந்த சந்திப்பின் போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்படும் தொடர் ரெய்டு குறித்தும் அதற்கு பதிலடியாக என்ன செய்யலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அனைத்து ஆதாரங்களையும் சேகரித்த எடப்பாடி பழனிசாமி இந்த சந்திப்பின் போது அவரிடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

 

அதாவது, ஆளும் கட்சியாக இருக்கும் திமுக அமைச்சர்கள் மற்றும் ஸ்டாலின் குடும்பத்தினர் ஆகியோர்களுக்கு எதிராக சேகரிக்கப்பட்ட தகவல்கள், தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு சூழல்கள் உள்ளிட்டவை குறித்து தான் சேகரித்த அனைத்து தகவல்களும் அடங்கிய ஃபைல்களை எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிடம் கொடுத்திருக்கிறார். மேலும், அதிமுக தலைவர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையை வைத்து வைத்து ரெய்டு என்கிற பெயரில் தொடர்ந்து டார்ச்சரை செய்து வருகிறார் ஸ்டாலின், ஆனால், அவரது ஆட்சியில் அமைச்சர்களும், அவரது குடும்பத்தினரும் குவித்து வைக்கும் கோடிகள் குறித்த விவரங்களும் இருக்கிறது என்று ஒரு பட்டியலை கொடுத்திருக்கிறார்.

 

இதையெல்லாம் வைத்து அவர்களின் முக்கிய இடங்களில் இன்கம் டாக்ஸ் ரெய்டுகளை மத்திய அரசு துவக்க வேண்டும் என்று கூடுதலாக ஒரு கோரிக்கையை எடப்பாடி தரப்பு வைத்துள்ளதாம். அதையெல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்ட அமித்ஷா நேரம் அமையட்டும் என்று சைலண்டாக பதிலளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

 

ஏற்கனவே தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக பல்வேறு வழக்குகளை போட்டு அதன் நிர்வாகிகளை அவ்வப்போது திமுக அரசு கைது செய்து வருவது அக்கட்சியினர் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எடப்பாடி தரப்பு இப்படியொரு ஆயுதத்தை கையில் எடுத்து கொடுத்துள்ளது. விரைவில் ஆளும் தரப்புக்கும் ஐடி ரெய்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.