சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எதிர்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி அமோக வெற்றி பெற்று 159 இடங்களை கைப்பற்றி இருக்கிறது. ஆனால் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி 25 இடங்களை மட்டுமே கைப்பற்றியது .அமைச்சர்கள் சுமார் 10 பேர் தோல்வியை சந்தித்து இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நாளைய தினம் நடைபெறும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சேலத்தில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அங்கு இருந்து கொண்டே தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி இருக்கிறார்.
அந்தக் கடிதம் ஆளுநர் கைக்குக் கிடைத்து விட்டால் அதனை ஆளுனர் ஏற்றுக்கொண்டு அதன் பிறகு ஸ்டாலின் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார். ஆகவே வரும் 7ஆம் தேதி ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார். இதற்கு இடையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நாளைய தினம் நடைபெற இருக்கிறது. அந்த சமயத்தில் சட்டசபை உறுப்பினர்கள் ஸ்டாலினை முதலமைச்சராக தேர்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்பிறகு முதலமைச்சர் பதவியேற்பு விழா மிக எளிமையான முறையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.