Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆவின் நிறுவனத்தை பாழாக்கும் திமுக அரசு : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

#image_title

ஆவின் நிறுவனத்தை பாழாக்கும் திமுக அரசு : எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திமுக அரசு ஆவின் நிறுவனத்தை பாழாக்கி விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஆவின் பால் மற்றும் ஆவின் பொருட்களின் விலை உயர்வுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். கொள்முதல் விலையை உயர்த்தாதது குறித்தும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுக அரசு பதவியேற்ற 28 மாத காலத்திற்குள் பால் மற்றும் பால் பொருட்களின் விலைகளை 8 முறை உயர்த்தி, மக்களை மேலும் வேதனையில் ஆழ்த்தியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குற்றம்சாட்டி உள்ளார்.

நேற்று ஆவின் நெய் விலை லிட்டருக்கு 70 ரூபாயும், அரை லிட்டர் 50 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 260 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அரை கிலோ வெண்ணை 15 ரூபாய் அதிகரித்து 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் சூழலில் ஆவின் நெய் மட்டும் வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மக்களிடைய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை முறை பால் மற்றும் பால் பொருட்களின் விலைகளை உயர்த்திய திமுக அரசு, தமிழகம் முழுவதும் உள்ள பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவைத் தொகைகளை இதுவரை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில் பால் மட்டும் ஆவின் பால் மற்றும் பொருட்களின் விளைவு இருக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள், பால் கொள்முதலில் இருந்து விற்பனை வரை எல்லாவற்றிலும் சரிவை சந்தித்து வரும் ஆவின் நிறுவனம், மறைமுகமாக தனியார் நிறுவனங்களுக்கு துணை போகிறதோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்றும் கருத்து தெரிவித்தார். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக பால் மற்றும் பால் பொருட்களின் விலையேற்றத்தை ரத்து செய்திட வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்றும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியுள்ளார்.

Exit mobile version