Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் 

Edappadi Palaniswami Property List

Edappadi Palaniswami Property List

எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னையில் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது,

அனைத்திந்திய அண்ணா திமுகவின் நிறுவன தலைவர், தமிழக மக்கள் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் நீங்கா புகழ் கொண்டிருக்கும், சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலையை சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்தியதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.

எம்ஜிஆரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், பொது அமைதியை சீர் குலைக்கவும் நினைக்கும் விஷமிகளை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version