Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாஜக வெளியே தவெக உள்ளே  அதிமுகவின் மாஸ்டர் பிளான்!!    எடப்பாடி பழனிசாமி கிரீன் சிக்னல்

Edappadi Palaniswami has stated that there is no alliance with BJP.

Edappadi Palaniswami has stated that there is no alliance with BJP.

AADMK-BJP:செய்தியாளர்கள் சந்திப்பில் இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று தெரிவித்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக  கூட்டணி என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பிறகு அதிக நெருக்கத்துடன் இருந்தது. இபிஸ் ,ஒபிஸ் அணிகள் ஒன்று சேர்வதற்கு பாஜக கூட்டணி தான் காரணம் என்று கூறலாம். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது இத் தேர்தலில் தோல்வியை சந்தித்தது.

அதன் பிறகு பாஜக மாநில தலைவரிடம் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்டது. அதன் பிறகு  அதிமுக மற்றும்  பாஜக என இரண்டு கட்சிகளும்  தமிழகத்தில் தனித்து தேர்தலை சந்தித்தது. இதில் பல தொகுதிகளில் பாஜக அதிமுக வை பின்னுக்கு தள்ளி  பாஜகவின் கூட்டணி இரண்டாம் இடத்தை பிடித்தது.

தற்போது வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அணைத்து கட்சிகளும் தொடங்கி இருக்கிறது. மேலும் புதிதாக கட்சி தொடங்கி உள்ள விஜய் கட்சி யாருடன்  கூட்டணி வைக்கும் என்ற எதிர் பார்ப்புகள் அரசியல் வட்டாரத்தில் அதிகரித்து உள்ளது. விஜய் அவர்கள் கட்சி தொடங்கிய முதல் இன்று வரை அதிமுகவை பற்றி எந்த வித விமர்சனங்களும் சொல்ல வில்லை.

இந்த நிலையில்  செய்தியாளர்கள் எழுப்பிய பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது   பதில் தெரிவித்து இருக்கிறார். இதனால்  அதிமுக  தவெகவுடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version